ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களை கலந்தாலோசிக்காமல், கார்ப்பரேட் அலுவலகம், BSNLன் மறு சீரமைப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கு ஆட்சேபனை தெரிவித்து BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியது. பலமுறை இந்த பிரச்சனை, BSNL CMDயிடமும் எழுப்பப்பட்டது. இந்த பிரச்சனையை AUABயிடம் விவாதிக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்தது. எனினும், இந்த பிரச்சனையை விவாதிக்க, அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மற்றும அதிகாரிகளின் சங்கங்களை மட்டும் நிர்வாகம் அழைத்துள்ளது. இந்தக் கூட்டம் 18.03.2020 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும். நிர்வாகத்தின் சார்பில் BSNL CMD மற்றும் DIRECTOR(HR) ஆகியோர் கலந்துக் கொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகளை மாநில செயலாளர்களும், மத்திய சங்க நிர்வாகிகளும், மத்திய சங்கத்திற்கு அனுப்ப வேண்டுமென நமது மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏதாவது பிரச்சனைகள் இருந்தால், மாநில சங்க நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும், மாநில சங்கத்திற்கு தகவல் தர வேண்டுமென மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது.

BSNL Employees Union Nagercoil