2019, மே மாதம் முதல் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட LIC பாலிஸிகளுக்கான PREMIUM தொகையை BSNL நிர்வாகம் கட்டாமல் இருந்தது. இந்த பாலிஸிகள் காலாவதியாக விடாமல் இருப்பதை உறுதி செய்ய PREMIUM தொகையை குறித்த காலத்தில் கட்ட வேண்டும் என பலமுறை BSNL ஊழியர் சங்கம், BSNL CMDஐ கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அது நடைபெறவில்லை. தற்போது குஜராத் மாநிலம், பாலன்பூர் LIC நிர்வாகம், PREMIUM தொகை கட்டாததால், பாலிஸிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன என பாலன்பூர் AO BSNLஇடம் தெரிவித்துள்ளது. BSNL நிர்வாகத்தால் காலதாமதமாக செலுத்தப்பட்ட PREMIUM தொகையினையும் LIC ஏற்றுக் கொள்ளவில்லை. இது ஒரு முக்கியமான பிரச்சனை. LICயின் உயர் மட்ட நிர்வாகத்திடம் இந்த பிரச்சனையை உடனடியாக எடுத்து சென்று, காலாவதியாகிப்போன பாலிஸிகளை விரைவில் புதுப்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென BSNL CMDக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.