26.05.2019 அன்று நடைபெற்ற JTO இலாகா தேர்வில், தவறான கேள்விகள், பாடப்பிரிவிற்கு வெளியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பல சரியான பதில்கள் உள்ள கேள்விகள் என பல குளறுபடிகள் இருந்ததால், தேர்வு எழுதிய பல தோழர்கள் வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பல சரியான பதில்கள் உள்ள கேள்விகளுக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டுமென CMD BSNLக்கு BSNL ஊழியர் சங்கம் மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளது. பல சரியான பதில்கள் உள்ள கேள்விகளை நீக்குவது என நிர்வாகம் கடைபிடித்துள்ள முறை சரியானதல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள BSNL ஊழியர் சங்கம், அந்த கேள்விகளுக்கு முழு மதிப்பெண்கள் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.