அன்புள்ள தோழர்களே,
கொரோனா வைரஸ் பிரச்சனை உலகம் முழுவதும் ஒரு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.  இதன் காரணத்தால் நமது நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டம் கூடுவதை தவிர்க்க கடுமையான வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
இந்த கடுமையான சூழ்நிலையினை நாமும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே, நமது போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் 31.03.2020 வரை ஒத்தி வைப்பது என மாநில மையம் முடிவு செய்துள்ளது.
எனவே ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக நாளை முதல் நாம் நடத்த திட்டமிட்டுள்ள போராட்டங்களும் தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்கிறோம்.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக உங்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு கூடுதல் செய்தி.  இன்று தமிழ் மாநில சங்கம் சார்பாக NFTE மாநில சங்கத்திடம் தொடர்பு கொண்டோம்.  ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைக்காக இணைந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தோம்.  அவர்களும் ஏற்றுக்கொண்டு TMTCLU விடம் ஆலோசித்து சாதகமான பதிலை தருவதாக கூறினர்.
தற்போது அவர்களும் இசைவு தெரிவித்துள்ளதாக NFTE மாநில செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
எனவே அடுத்த கட்டமாக நாம் இணந்து வலுவான போராட்டத்தை தமிழகத்தில் நடத்துவோம்..
தோழமையுடன்,
A.பாபு ராதாகிருஷ்ணன்
மாநில செயலாளர்.