கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வெகு வேகமாக பரவி வருகிறது. இத்தாலி, சைனா, ஃப்ரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாட்டுகளில் இருந்து வரும் கடுமையான தொற்று மற்றும் பெரிய அளவிலான மரணங்கள் அனைவரையும் அச்சுறுத்தி வருகின்றன. இது நமது தேசத்திலும் நிகழ்ந்து விடக்கூடாது. சுகாதார நலத்துறை விடுத்துள்ள அறிவுறுத்தல்களை ஏற்று நடந்து, தாங்கள் இந்த நோயால் பாதித்து விடாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று BSNL ஊழியர்களையும், BSNL ஊழியர் சங்கத்தின் முன்னணி தலைவர்களையும் மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்து கூட்டங்களும் விழாக்களும் இந்த காலத்தில் நடத்துவதை தவிர்க்க வேண்டும். நிலைமை மேம்படும் வரை அனைத்து கிளை, மாவட்ட மற்றும் மாநில மாநாடுகளையும் ஒத்தி வைக்க வேண்டுமென மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

நமது தமிழகத்தில் திட்டமிட்டுள்ள அனைத்து கிளை மற்றும் மாவட்ட மாநாடுகளையும் தற்போதைக்கு ஒத்தி வைக்க வேண்டுமென தமிழ் மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது. நிலைமை மேம்படும் வரை எந்த ஒரு விழாவிலும், கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டாம் என்றும், சுகாதாரத்துறை விடுத்துள்ள தனிமனித கட்டுப்பாடுகளையும் ஏற்று நடந்துக் கொள்ள வேண்டும் எனவும் தமிழ் மாநில சங்கமும் கேட்டுக் கொள்கிறது.

BSNL Employees Union Nagercoil