ஏழைகளைப் பாதுகாக்க தலா ரூ.10 ஆயிரம் விகிதம் வழங்க வேண்டும்

புதுதில்லி, மார்ச் 23- கொரோனா வைரஸ் தாக்கத்தால், நாட்டில் சுமார் 20 கோடி பேர் வேலையிழந்துள்ளதாகவும், அவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (Confederation of Indian Industry-CII) வேண்டு கோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் சமர்ப் பித்துள்ள கடிதத்தில், சிஐஐ மேலும் குறிப்பிட்டி ருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ளதால் இந்திய தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. அன்றாட ஊதியத்தை நம்பி வாழும், பெரும்பான்மையான தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானம் இன்றி திணறி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு கீழே இருக்கும் இளை ஞர்களுக்கு ரூ. 5 ஆயிரம் என்ற அளவிலும், 60 வயது மேற்பட்டவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அளவிலும் உத வித்தொகை நேரடியாக அவர்களுடைய கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.

கொரோனா வைரஸால் வர்த்தகம் முடங்கும். விளைவாக பொருளாதார வளர்ச்சி தடைபடும். இதை எதிர்கொள்ளும் விதமாக நிதிக் கொள்கை கள் வகுக்கப்பட வேண்டும். நாட்டின் ஜிடிபி-யில் 1 சதவிகிதத்தை, அதாவது ரூ. 2 லட்சம் கோடியை வருமான இழப்பைச் சந்தித்தவர்களுக்கு வழங்கு வதற்கு ஒதுக்க வேண்டும். தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் அரசு தனது சேமிப்பை அதிகரிக்க முடியும். அந்த சேமிப்பு தொகையை இத்திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். ரூ. 2 லட்சம் கோடியை ரூ. 10 ஆயிரம் என்று பகிர்ந்தளித்தால் 20 கோடி பேருக்கும், ரூ. 5 ஆயிரம் என்று பகிர்ந்தளித்தால் 40 கோடி பேருக்கும் வழங்க முடியும்.

இந்தியாவில் மொத்தம் 20 கோடி பேர் சாதா ரண தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள்தான் அதிக பாதிப்பைச் சந்திக்கின்றனர். அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் மத்திய அரசு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். அதேபோல் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்ப வர்களுக்கும், தினக் கூலி பெறுபவர்களுக்கும் ஒரு மாதம் ரேசன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பங்குச் சந்தையை மீட்டெடுக்கும் வகையில் வரி தொடர்பாக அறிவிப்புகள் வெளியிடப்பட வேண் டும். நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கான 10 சதவிகித வரியை முழுதாக நீக்க வேண்டும். தனி யார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

விமானத்துறை, விடுதிகள், சிறு குறு நிறு வனங்கள், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்துறைகளை மீட்டெடுக்கும் வகையில் வரித் தள்ளுபடி உள்ளிட்ட பொருளாதார சலுகைத் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி செலுத்துவது தொடர்பாக கூடு தல் அவகாசம் வழங்க வேண்டும். அதேபோல் ரிசர்வ் வங்கி தற்போதைய சூழலை எதிர்கொள்ளும் வகையில் நிதிக் கொள்கைகளை வகுக்க வேண்டும். ரெப்போ விகிதம் 50 புள்ளி கள் அளவில் குறைக்கப்பட வேண்டும். அதேபோல் வராக் கடனுக்கான வரையறையை மாற்ற வேண்டும். அதன் வரம்பான 90 நாட்களை 180 நாட்களாக உயர்த்த வேண்டும். இவ்வாறு சிஐஐ வலியுறுத்தியுள்ளது.

BSNL Employees Union Nagercoil