இந்திய சந்தையில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள முதலீடுகள் பொதுவாக 2 காரணத்திற்காகக் குறையும். ஒன்று உள்நாட்டுச் சந்தை மோசமாக இருந்தாலோ அல்லது சரிவை நோக்கிச் சென்றாலோ குறையும். மற்றொன்று இந்தியச் சந்தையில் முதலீடு செய்துள்ள வெளிநாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சரிந்தால் குறையும். தற்போது 2 காரணங்களும் ஒன்று சேர்ந்துள்ளதால் இந்தியாவின் அன்னிய செலாவணி எப்போதும் இல்லாத வகையில் 12 வருட சரிவை அடைந்துள்ளது.

கொரோனா ஆரம்பம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே 8 வருட சரிவில் இருந்த நிலையில் அன்னிய செலாவணி கணிசமாகக் குறைந்துகொண்டே வந்த நிலையில், சீனாவில் கொரோனா பிரச்சனை வெடித்தது. இதன் மூலம் சர்வதேசச் சந்தையின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி அளவீடுகள்

12 வருட சரிவு

இதைத் தொடர்ந்து சீனாவில் மட்டுமே இருந்தே கொரோனா உலக நாடுகளுக்கு வேகமாகப் பரவியது. இதனால் சர்வதேச பங்குச்சந்தைகளை மளமளவெனச் சரியத் துவங்கியது. இது போதாத இந்தியாவின் அன்னிய செலாவணி குறைவதற்கான காரணம். இப்படிப் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவின் அன்னிய செலாவணி 12 வருட சரிவை சந்தித்து.

11.98 பில்லியன் டாலர்

மார்ச் 20 வரையில் முடிந்த வாரத்தில் மட்டும் இந்திய சந்தையில் இருந்து சுமார் 11.98 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் வெளியேறியது. இதே காலகட்டத்தில் தான் ரூபாய் மதிப்பின் சரிவைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கையை எடுத்தது. ஆனால் பன்னாட்டுச் சந்தைகள் தங்களது முதலீட்டை காப்பாற்றும் நோக்கில் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றியது.

தடாலடி சரிவு

மார்ச் 20 உடன் முடிந்த வாரத்தில் 11.98 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் குறைந்த நிலையில் இந்திய சந்தையில் மொத்த அன்னிய செலாவணி தொகை எப்போதும் இல்லாத வகையில் 469.9 பில்லியன் டாலராகக் குறைந்தது. இதேபோன்ற சரிவு 2008ஆம் ஆண்டு நடந்த சர்வதேச நிதி நெருக்கடிக் காலத்தில் ஏற்பட்ட பாதிப்பைப் போலவே உள்ளது.

தடாலடி சரிவு

மார்ச் 20 உடன் முடிந்த வாரத்தில் 11.98 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் குறைந்த நிலையில் இந்திய சந்தையில் மொத்த அன்னிய செலாவணி தொகை எப்போதும் இல்லாத வகையில் 469.9 பில்லியன் டாலராகக் குறைந்தது. இதேபோன்ற சரிவு 2008ஆம் ஆண்டு நடந்த சர்வதேச நிதி நெருக்கடிக் காலத்தில் ஏற்பட்ட பாதிப்பைப் போலவே உள்ளது.

BSNL Employees Union Nagercoil