தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிக்கு பொறுப்பான மத்திய தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் 10.04.2020 அன்று CMD BSNLக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய வழங்கப்படாததை சுட்டிக்காட்டி, தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் இந்தக் கடிதம் எழுதப் பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஊதியம் தரப்படாமல் இருப்பது ’பேரிடர் நிர்வாக சட்ட’த்தின் விதிகளை மீறும் செயல் என்று சுட்டிக்காட்டியுள்ள துணை ஆணையர், இந்த ஊதிய பிரச்சனையை உடனடியாக தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்