கொரோனா நிலைமையை பயன்படுத்தி கார்ப்பரேட்டுகள், பெரும் வணிக நிறு வனங்களுக்கு சாதகமாக – தொழிலாளர்களின் நலனை காவு கொடுத்து, வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தும் மத்திய அரசின் செயலை சிஐடியு வன்மையாக கண்டித் துள்ளது. இதுதொடர்பாக இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) பொதுச் செயலாளர் தபன்சென் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்போவதாக வரும் ஊடக செய்திகளை அரசு தொழிலாளர்களின் மீது தொடுக்கும் தாக்குதல் என்று சிஐடியு ஆழ்ந்த கவலையுடன் பார்க்கிறது. கதவடைப்பு மற்றும் கதைவடைப்பிற்குப் பின்னர் உற்பத்தி, சேவை இரண்டிற்கும் உதவிடும் வகையில் அசாதாரண சூழல் என்று கருதி அரசு தொழிற்சாலை சட்டத்தின் 51 வது பிரிவில் மாற்றம் கொண்டு வருவதாக தெரிகிறது. தற்போது நிலவும் அசாதாரண கதவ டைப்பு, கதைவடைப்பிற்குப் பிந்தைய காலங்க ளில் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய நேர்ந்தால், தற்போது தொழிற்சாலை சட்டத்தில் இருக்கும் ஓவர்டைம் நடைமுறையைக் கொண்டே அதை செய்யலாம் என்றும் தனியாக சட்டத் திருத்தம் தேவையிருக்காது என்றும் சிஐடியு கருதுகிறது. தொழிலாளர்கள் செய்யும் அதிக வேலைக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கும் பொறுப்பிலிருந்து தன் எஜ மானர்களாகிய கார்ப்பரேட் முதலாளிகளை விடு விப்பதும் தொழிலாளர்களின் உழைப்பை இலவசமாக முதலாளிகளுக்கு வழங்குவதுமே அரசின் நோக்கம் என்பது தெளிவாகிறது . உழைப்பாளிகளின் சம்பளத்தை நேரடியாக வெட்டி பெரும் முதலாளிகளுக்கு பரிசு வழங்க கொரோனா நெருக்கடி பயன்படுத்தப்படுகிறது.

உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எட்டு மணிநேர வேலை எனும் நடைமுறையை சிதைப்பது மோடி அரசின் செயல் திட்டத்தில் ஏற்கனவே உள்ள ஒன்று. நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தொழில் உறவுகள் 2020 மசோதாவில் எட்டு மணி வேலை நேரத்தை அரசுகள் தத்தம் வசதிற்கேற்ப மாற்றிக் கொள்ள லாம் எனும் வழிகாட்டுதல் இருக்கிறது. இன்னும் சட்டமாக்கப்படவில்லை. நிர்வாக ஆணை பிறப்பிக்க வாய்ப்பிருக்கிறது. தற்கால சூழலில் நிர்வாக ஆணை அல்லது சட்ட வடிவிலும் கூட எட்டு மணி நேர வேலையை அதிரடியாக 12 மணி நேரமாக நீட்டிக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல இச்செயல் ஓவர்டைம் ஊதியம் வழங்குவதிலி ருந்து முதலாளி வர்க்கத்தினரை விடுவிப்பதும், தொழிலாளியிடமிருந்து செலவில்லாமல் கூடுதல் உழைப்பைக் கறந்து முதலாளிகளிடம் கையளிப்பதுமான மோடி அரசின் கேடுகெட்ட செயல்களாகும். தொழில் உறவுகள் மசோதா வில் சொல்லப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்களை யும் மத்திய அரசின் தற்போதைய முனைப்பு களையும் இணைத்து சிந்தித்தால் அரசின் மோசடி மற்றும் கேடான நோக்கங்கள் புரியும்.

அரசின் தீமையான இத்திருத்தம் குறித்து அதிகாரம் பொருந்திய அரசு அதிகாரிகள் இது வரை எந்த தொழிற்சங்கங்களுடனும் ஆலோ சிக்கவில்லை. முத்தரப்பு உரையாடல் எனும் நடைமுறை காலால் மிதிக்கப்பட்டுள்ளது மட்டு மல்லாமல் கொரோனா பேரிடரை அனைவரும் இனைந்து வெல்வோம் எனும் பிரதமர் மற்றும் ஏனையோரின் பிரகடனங்கள் எவ்வளவு பொய்யானது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது . அரசின் மோசடிச்செயலை கண்டிப்பதுடன் அழிவுப்பாதையில் பயணிக்கவேணடாம் என்று அரசை சிஐடியு அறிவுறுத்துகிறது. சங்க சார்புகள் கடந்து உழைப்பாளி மக்கள் அனைவரும் ஒன்றி ணைந்து இந்த பிற்போக்கு நடவடிக்கைக்கெதி ராக அனைத்திந்திய அளவிலும் பணியிடங்களி லும் போராட அறைகூவல் விடுகிறது.

BSNL Employees Union Nagercoil