கன்னியாகுமரி மாவட்ட BSNL நிறுவனத்தில் 250 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். BSNL நிர்வாகம் தனது நிதி நிலையினை காரணம் காட்டி கடந்த பத்து மாத காலத்திற்கும் மேல் ஊதியம் வழங்கப்படவில்லை.  குறிப்பாக மாவட்டத்தில் ஒரு பகுதி தொழிலாளர்களுக்கு 14 மாத காலத்திற்கு மேல் ஊதியம் வழங்கப்படவில்லை. இதற்காக அந்த தொழிலாளர்கள் பலமுறை முறையிட்டும், பல கட்ட போராட்டங்கள் நடத்தியும்,  பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய பின்னரும் கூட அவர்களுக்கு ஊதியம் தரப்படவில்லை.  இன்னமும் நிலுவையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில், கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதற்கொண்டு கொரோனா தொற்று நோய் காரணமாக மத்திய அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் இருந்து விரட்ட முயற்சிக்கின்றது மாவட்ட நிர்வாகம்  ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு ஒப்பந்த தொழிலாளியையும் வேலையை விட்டு நிறுத்தக் கூடாது என்று மத்திய அரசாங்கம் உத்தரவிட்ட போதும் ஒப்பந்த தொழிலாளர்களை புதிய முறையிலான டெண்டர் என்று கூறி அவர்களை பணி நீக்கம் செய்ய முயற்சிக்கின்றது.  சுமார் ஒரு வருட காலமாக ஊதியத்தை தராமல் இருப்பதுடன், அவர்களை பணியில் இருந்து விரட்டுவது என்பது மனிதாபிமானமுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

புதிய டெண்டர் முறையில், டெண்டர் எடுத்தவருக்கு இந்த ஊரடங்கு காலத்திலேயே, அவர் SECURITY DEPOSIT கட்டினாலும் சரி, கட்டாவிட்டாலும் சரி என்று டெண்டர் வழங்கப்படுகிறது.     பல வருடங்களாக போராடி வந்த நாங்களும், சமூக தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக போராட இயலாத சூழலை பயன்படுத்தி, பரிதாபகரமாக வாழ்க்கையை நடத்தி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேலை செய்த நாட்களுக்கு ஊதியமும் தராமல், அவர்களை பணியில் இருந்து விரட்டுவதற்காக நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது.

எனவே கீழ் காணும் கோரிக்கையை  வலியுறுத்தி 20 மே 8 ம் தியதி மாநிலம் தழுவிய  சமூக இடைவெளி தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.

  • ஒப்பந்த தொழிலாளர்கள் எவரையும் பணி நீக்கம் செய்யக் கூடாது.
  • நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்.
  • பாதிக்கப்பட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய டெண்டர் முறையை ரத்து செய்து பழைய நிலையே தொடர வேண்டும்.

 

நாகர்கோவில் GM அலுவலகத்தில் காலை 10.30 மணி

தலைமை:  க.ஜார்ஜ்  மாவட்டத்தலைவர் BSNL ஊழியர் சங்கம்

BSNL Employees Union Nagercoil