JE இலாகா தேர்வை மேலும் கால தாமதமின்றி உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி, மனித வள இயக்குனருக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்
2017-18ஆம் ஆண்டிற்கான 50% கோட்டாவின் கீழ் நடக்க வேண்டிய JE இலாகா தேர்வுகள் 07.04.2018ல் நடக்கவிருந்தது.  பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டது.
20.11.2018ல் நடைபெற்ற 37வது தேசிய கவுன்சில் கூட்டத்தில், இந்த தேர்வை ‘off line’ மூலமாக நடத்துவது என்று முடிவெடுக்கப் பட்டது.  எனினும் அன்று முதல் இன்று வரை அந்த தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை கொடுக்காமல், நிர்வாகம் கால தாமதப்படுத்தி வருகிறது.
அந்த தேர்வை எழுத தகுதி பெற்றுள்ள ஊழியர்களின் அதிருப்தியை தெரிவித்து, மேலும் கால தாமதப்படுத்தாமல் அந்த தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம், மனித வள இயக்குனருக்கு மீண்டும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளது

BSNL Employees Union Nagercoil