தோழர் கே.வரதராசனுக்கு பிரியாவிடை….

தலைவர்கள் நேரில் அஞ்சலி:

தோழர் கே.வரதராசன் இறுதி நிகழ்ச்சி ஞாயிறு அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது.

தோழர் கே.வரதராசன், 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றுபட்ட திருச்சி மாவட்டம் மற்றும் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுகின்ற மகத்தான தளபதியாக திகழ்ந்தவர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க ொதுச்செயலாளராக 10 ஆண்டு களுக்கு மேலே பணியாற்றி ஏராளமான விவசாயப் போராட்டங்களுக்கு வழிவகுத்தவர். அகில இந்தியவிவசாயிகள் சங்கப் பொதுச்செய லாளராக 10 ஆண்டு காலம் பணியாற்றிஇந்தியா முழுவதும் போராடி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு வழிகாட்டியவர். உழைப்பாளி மக்கள், ஏழை, நடுத்தர மக்கள்,சமூக கொடுமைகளுக்கு உள்ளாக்கப் படுகின்ற தலித் மக்களுக்கு ஆதரவாக எண்ணற்ற போராட்டங்களில் தனது முத்திரையை பதித்தவர்.

சிறந்த பேச்சாளர். கடுமையான தத்துவ விசயங்களை கூட எளிமையான முறையில் எழுதக் கூடிய தலைசிறந்த எழுத்தாளர். கவிதை, கட்டுரை, பாட்டு என பன்முகத் தன்மை கொண்ட இலக்கியவாதியாக திகழ்ந்தவர். அவருடைய மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள இடதுசாரி இயக்கங்களுக்கு, விவசாயிகளுக்கு, விவசாயத்தொழிலாளர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. தோழர் கே.வரதராசன் தனது சகோ தரர்கள் லெட்சுமணன், அனந்தராஜன் மற்றும் தன் குடும்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பங்காற்றுகின்ற, பணியாற்றுகின்ற குடும்பமாக இணைத்து பணியாற்றிய ஒப்பற்ற தலைவராக திகழ்ந்தவர். எனவே அவருடையஇழப்பு என்பது அவரது குடும்பத்திற் கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது பிரிவால் வாடுகின்ற மகன், மகள், குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை.

இரங்கல் கூட்டத்தில் தோழர் கே.வரதராசனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் ஊர்வலமாக ஓயாமாரி மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

பிரகாஷ் காரத்,பினராயி விஜயன் இரங்கல்
தோழர் கே.வரதராசன் மறைவுச்செய்தி அறிந்து அதிர்ச்சி தெரி வித்தும் இரங்கல் தெரிவித்தும் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், கேரள முதலமைச்சர் பினராயிவிஜயன், எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை,பிருந்தா காரத், அகில இந்திய விவ சாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, பொருளாளர் பி.கிருஷ்ணபிரசாத் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எஸ்யுசிஐ(கம்யூனிஸ்ட்) பொதுச் செயலாளர் ரங்கசாமி, ஆந்திர மாநில விவசாயிகள் சங்க தலைவர் கேசவராவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

ஏராளமானோர் அஞ்சலி
தோழர் கே.வரதராசன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திட மாநிலம் முழுவதிலுமிருந்தும், ஊரடங்கு காரணமாக தோழர்களால் வர இயலவில்லை. எனினும் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், கரூர் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, பெரம்பலூர் மாவட்டச்செயலாளர் ஆர்.மணிவேல், இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் மாவட்டச் செயலாளர் பி.டி.சி.சேரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் இந்திரஜித், மாநகர மாவட்டச் செயலாளர் திராவிடர் மணிமற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட தலைவர்கள், வர்க்க, வெகுஜன அமைப்பு களின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலிசெலுத்தினர்.

BSNL Employees Union Nagercoil