தரைவழி தொலைபேசி இணைப்புகளுக்கான பாரம ரிப்புப் பணிகளை தனியார்  ஏஜென்சிகளிடம் ஒப்படைப் பதையும், பழுதுகள் நீக்க காலதாமதம் ஆவதை தடுக்க வும் நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட  செயலாளர் ஆர்.செல்லசு வாமி  மாவட்ட ஆட்சியர் பிர சாந்த் வடநேரேவிடம் மனு அளித்தார்.அதன் விபரம் வருமாறு, குமரி மாவட்டத்தில் தற்போது சுமார் 45000 தரை வழி தொலைபேசி இணைப்பு களும், சுமார் 18000 பிராட்பேண்ட் இணைப்பு களும் செயல்பட்டு வரு கின்றன. தரைவழி மற்றும்  பிராட்பேண்ட் இணைப்புக ளில் ஏற்படும் பழுதுகளை நீக்கும் பராமரிப்புப் பணி  தற்போது தனியார் ஏஜென்சி களிடம் கொடுக்கப்பட்டுள் ளதாக தெரிய வருகின்றது.

அந்த தனியார் ஏஜென்சிக ளும் பாராமரிப்புப் பணியில் எந்த முன் அனுபவமும் இல்லாதவர்கள்.  முன் அனுபவம் இல்லாத ஒப்பந்தக்காரர்கள் அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது பராமரிப்புப் பணி யில் ஈடுபட்டிருந்த ஒப்பந் தத் தொழிலாளர்கள் பல ரையும் வேலையை விட்டு நீக்கி விட்டனர். இதன் விளை வாக போதிய பராமரிப்பு  இல்லாமல் தொலைபே சிகளின் பழுதுகள் குவிந்துள் ளன. உதாரணமாக 2020 மே 2 ஆம் தேதியன்று தரைவழி தொலைபேசிகளின் பழுது எண்ணிக்கை 523 லிருந்து படிப்படியாக உயர்ந்து மே  12 ஆம் தேதியன்று 672 ஆக  மாறியுள்ளது. அதேபோல் மே 2 ஆம் தேதியன்று பிராட் பேண்டு தொலைபேசிகளின் பழுது எண்ணிக்கை 256 ஆக  இருந்து 381 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் கார ணமாக ஊரடங்கு அமுல்ப டுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட வேண்டும் என்று வலியு றுத்தப்பட்டுள்ளது. இந்தச்  சூழ்நிலையில் தொ லைத்தொடர்பு என்பது மிக  மிக அத்தியாவசிய சாதன மாக மாறியுள்ளது. அதிலும்  குறிப்பாக பெருமளவில் ஆன்லைன் அறிமுகப்படுத் தப்பட்டுள்ள சூழ்நிலையில் பிராட்பேண்ட் சேவை மிக  முக்கியமாக கருதப்படு கின்றது. செயல்படாத தொ லைபேசியோ அல்லது பிராட்பேண்ட் இணைப்பு களோ எந்த விதத்திலும் அனு மதிக்க முடியாது. ஆட்குறைப்பு செய்யப்ப டாமல் உரிய ஊழியர்களை நியமனம் செய்து தொலை பேசி மற்றும் பிராட்பேண்ட்  பழுதில்லாத செயல்பா ட்டிற்கு பிஎஸ்என்எல் நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

BSNL Employees Union Nagercoil