தொழிலாளர் சட்டங்களை திருத்துவதை உடனே நிறுத்த வேண்டும். தனியார்மயப் படுத்தும் மின்சார சட்டம் 2020 – ஐ கைவிட வேண்டும்.  மத்திய – மாநில அரசாங்கங்களின் உத்தரவுப்படி நிரந்தர – கேசுவல் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் அனைவருக்கும் பொது முடக்க காலத்திற்கு முழு சம்பளம் வழங்கிட வேண்டும்.   அனைத்து முறைசாரா தொழிலா ளர்களுக்கும் நிவாரண நிதியும் , மளிகை பொருட்களும் -தடையின்றி விரைவாக கொடுப் பதை உறுதிப்படுத்த வேண்டும், வாரிய பதிவை வலியுறுத்தாதே,  பொது முடக்கத்தால் வரு மானம் இழந்த தொழிலாளர்கள் அனைவ ருக்கும் மார்ச் , ஏப்ரல் , மே மாதங்களுக்கு தலா  ரூ . 7500 வீதம் வழங்கிட வேண்டும்.   பொது முடக்க காலத்தில் அரும்பணி ஆற்றிய மருத்துவ பணியாளர்கள் , மின்சாரம் , வருவாய் துறை ஊழி யர்கள் , காவலர்கள் உள்ளிட்ட வர்களில்    பணி யில் இறந்துபோக நேரிட்டால் நிரந்தரம் , கேசுவல் , காண்ட்ராக்ட் என வித்தியாப்படுத்தா மல் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்  உள்ளிட்ட  கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்  அகில இந்திய அளவில்  ஆர்ப்பாட்டம்  வெள்ளியன்று நடைபெற்றது

BSNL Employees Union Nagercoil