சமீபத்தில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு, 01.01.2020 முதல் 01.07.2021 வரையிலான பஞ்சப்படி உயர்வை நிறுத்தி வைக்க முடிவெடுத்தது. உடனடியாக தொலை தொடர்பு துறையும் 2020 ஏப்ரல் மாதம் ஓய்வு பெறும் BSNL ஊழியர்களுக்கு பழைய விகிதத்திலேயே, அதாவது 157.3% என்ற அளவில் ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும் என 28.04.2020 அன்று உத்தரவிட்டது. இந்த தன்னிச்சையான முடிவை கடுமையாக எதிர்த்து, BSNL ஊழியர் சங்கம் 28.04.2020 அன்றே, தொலைதொடர்பு துறையின் செயலாளருக்கு கடிதம் எழுதியது. BSNL ஓய்வூதியர்களுக்கு DPE அறிவித்த பஞ்சப்படியை குறைக்க தொலை தொடர்பு துறைக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லையென அந்தக் கடிதத்தில் BSNL ஊழியர் சங்கம் தெரிவித்திருந்தது. 03.04.2020 அன்றே DPE, BSNL ஓய்வூதியதாரர்களுக்கு 160.7% பஞ்சப்படியை வழங்க உத்தரவிட்டு விட்டது.

நமது எதிர்ப்பின் அடிப்படையில் 28.04.2020 தேதியிட்ட உத்தரவை ரத்து செய்து 26.05.2020 அன்று தொலை தொடர்பு துறை மற்றொரு கடிதத்தை வெளியிட்டுள்ளது.

மத்திய சங்கத்திற்கு தமிழ் மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.