ராணுவ தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றுவது என்கிற அரசின் முன்மொழிவிற்கு எதிராக கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் செல்ல, அந்த தொழிற்சாலைகளில் உள்ள 82,000 தொழிலாளர்களை உள்ளடக்கிய முக்கிய தொழிற்சங்கங்கள் தயாரிப்பு பணிகளில் இறங்கியுள்ளன. நாடு முழுவதும் ORDNANCE FACTORIES BOARDன் கீழ் 41 ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ORDNANCE FACTORIES BOARDஐ கார்ப்பரேஷனாக மாற்றி, அதனை பங்கு சந்தையில் பட்டியலிட மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனை கார்ப்பரேஷனாக மாற்றுவது என்பது தனியார் மயத்தை நோக்கிய பயணத்தில் மிக முக்கியமான நடவடிக்கை என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அரசின் இந்த முயற்சிக்கு எதிராக வேலை நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பை நடத்த, இவற்றில் உள்ள முக்கியமான தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அந்த வாக்கெடுப்பு ஜூன் மாதம் 8ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த வாக்கெடுப்பு முடிந்தவுடன், சம்மேளனங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை கொடுக்க உள்ளன.

ராணுவ தளவாட தொழிற்சாலைகளின் தனியார்மயமாக்கலை எதிர்த்து, ஒரு சில மாதங்களுக்கு முன், இந்த தொழிற்சாலைகளின் ஊழியர்கள், 30 நாட்கள் வேலை நிறுத்தத்தை துவக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் இந்த சம்மேளனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, உறுதி மொழி கொடுத்ததின் அடிப்படையில், அந்த வேலை நிறுத்தம் ஐந்து நாட்களுக்கு பின் விலக்கிக் கொள்ளப்பட்டது.

BSNL Employees Union Nagercoil