உலக அளவில் கொரோனா பாதிப்பு 65 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், மரணத்தின் எண்ணிக்கை 4 லட்சத்தை தொட்டிருக்கும் நிலை யில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த செவிலியர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மே 6 அன்று சர்வதேச செவிலியர் கவுன்சில் (ஐசிஎன்) வெளியிட்டிருந்த அறிக் கையில் 260 செவிலியர்கள் கொரோனா பாதிப் பால் மரணமடைந்திருப்பதாக கூறியிருந்தது; ஒரே மாதத்தில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கை தாண்டியுள்ளது என்பது வேதனை யின் உச்சமாகும்.

ஜெனீவாவை மையமாக கொண்டு இயங்கும் சர்வதேச செவிலியர் கவுன்சில் அளித்துள்ள  இந்த எண்ணிக்கையே கூட குறைவானதாகத் தான் இருக்க முடியும் என்று பல நாடுகளில் இயங்கி வரும் சுகாதார முகமைகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளில் முன்னணி படை வரிசையாக ஈடுபட்டுள்ள செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக் கப்பட்டுள்ளனர் என்றும் அதிர்ச்சியான விப ரங்களை சர்வதேச செவிலியர் கவுன்சில் வெளி யிட்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் விகிதம் அதிகமாக உள்ளது எனவும், இன்னும் குறிப்பாக அமெ ரிக்காவில் நூறு பேருக்கு பத்து முதல் இருபது பேர் என்ற அளவில் அதிக எண்ணிக்கையில் செவி லியர் மற்றும் சுகாதார பணியாளர்கள் தொற்று அபாயத்தில் சிக்கியிருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் அதே வேளையில்,  மிக கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்பட்டிருந்த இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்படும் விகிதம் குறைவாக உள்ளது.

இந்த விபரங்கள் ஒரு விசயத்தை தெளிவு படுத்துகின்றன. அமெரிக்கா, பிரேசில், சிலி, பெரு, மெக்சிகோ போன்ற நாடுகளில் அந்த அரசுகள் தங்களது மக்களின் உயிரைப் பற்றி எப்படி கவலைப்படவில்லையோ அதேபோல, கொரோனா எதிர்ப்புப் போரில் முன்னணியில் இருந்து செயல்பட்டுவரும் மருத்துவர்கள், செவி லியர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படவில்லை. சீனா வில் பாதிப்பு ஏற்பட்டவுடனே வுகான் நகரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை களத்தில் இறக்கியது அந்நாட்டு அரசு. கடினமான சூழலில் அவர்கள் பணி செய்ய நேரிட்டது. ஆனால் அவர்களின் உயிரை பாதுகாப்பதில்தான் சீன அரசு முதன்மை கவனம் செலுத்தியது. மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லையேல் வுகான் நகரம் பிழைத்திருக்காது என்பதை அறிந்திருந்தது சீனா. ஆனால் மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாத டிரம்ப், பொல்சானாரோ போன்ற ஆட்சியாளர்களுக்கு மருத்துவர், செவிலியர்களின் உயிரும் முக்கியம் அல்ல!

BSNL Employees Union Nagercoil