நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 3.2 சதவீதமாக சரியும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

கோவிட்-19 தாக்கம் காரணமாக, கடந்த 2019-20 நிதியாண்டில், 4.2 சதவீதமாக இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் நடப்பு நிதியாண்டில் 3.2 சதவீதமாக சரியும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் பெரும் வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளதாகவும், கோவிட்-19 பாதிப்புகள் குறையும் பட்சத்தில், அடுத்த 2021-22 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மேம்பட வாய்ப்பிருப்பதாக உலக வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், கோவிட்-19 பரவல் காரணமாக, உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு எனக் கூறியுள்ள உலக வங்கி, சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி 5.2 சதவீதமாக குறையும் என தெரிவித்துள்ளது. இது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய சவால் என்றும், பொருளாதாரத்தை மீட்டு கட்டமைப்பதற்கான வழிகளை சர்வதேச சமூகம் கண்டறிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

BSNL Employees Union Nagercoil