நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை என்பது உழைக்கும் வர்க்கம் உதிரம் சிந்தி, பல்வேறு தியாகங்களை பெற்ற அடிப்படை உரிமை. எனினும், ஊரடங்கு காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தடைகளை சாதகமாக பயனபடுத்தி பல்வேறு மாநில அரசாங்கங்கள், மத்திய நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஆதரவோடு, இந்த உரிமையை பறித்து, வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து, 12 மணி நேரமாக உயர்த்தின. இந்த ஊழியர் விரோத போக்கிற்கு எதிராக 2020, மே 22ஆம் தேதி, நாடு தழுவிய எதிர்ப்பு இயக்கங்களை 10 மத்திய தொழிற்சங்கங்களும் நடத்தின. சர்வதேச தொழிலாளர் நல அமைப்பான ILOவிடமும் புகார் கொடுத்தன. அந்த அமைப்பும், ILOவின் இந்த முடிவுகளை மீறக்கூடாது என மத்திய நரேந்திர மோடி அரசாங்கத்திடம் தெரிவித்தது. மத்திய தொழிற்சங்கங்கள் கொடுத்த அழுத்தங்கள் தற்போது வேலை செய்ய துவங்கியுள்ளன. வேலை நேரத்தை எட்டு மணி நேரமாக குறைத்து கர்நாடக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பை, அந்த அரசாங்கமே 11.06.2020 அன்று திரும்ப பெற்றுள்ளது.

BSNL Employees Union Nagercoil