BSNL 4 G  சேவை துவங்குவதில் அதிக காலதாமதம்
BSNL  நிறுவனம் 4 G சேவையை தொடங்குவதில் ஏற்பட்டுள்ள தேவையற்ற   காலதாமதம் BSNL ன் புத்தாக்கத்தை கடுமையாக பாதிக்கின்றது. சில சுய நல சக்திகள் உருவாக்கிய சதிவலையின் விளைவாக 4 G கருவிகள் வாங்குவதற்கான BSNL டெண்டர்கள் முடக்கப் பட்டுள்ளன. TEPC அமைப்பு  கிளப்பிய ஏற்றுக் கொள்ள முடியாத ஆட்சேபணைகளுக்கு மத்திய அரசு தேவையற்ற முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இது மிகவும் வருந்தக்கது.   ”இந்தியாவில் உற்பத்தி செய்வது “ என்ற கொள்கையை  அமுல்படுத்துவதை BSNL உறுதி செய்வது என்ற பெயரில், BSNL -க்கு சமதள ஆடுகளம் மறுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே வெளியிடப் பட்ட டெண்டரின் அடிப்படையில் 4 ஜி கருவிகள் வாங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடனடியாக BSNL -க்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப் படுகிறது.
BSNL  புத்தாக்க திட்டம் செயல்படுத்தப் படாமல் இருப்பது
BSNL -ஐ புத்தாக்கம் செய்வதற்கான திட்டத்தை இந்திய அரசாங்கம் அறிவித்து ஏறத்தாழ 8 மாதங்கள் ஆகின்றன.  இத்திட்டத்தின்படி, 79,000 ஊழியர்கள் VRS-ன் கீழ் வெளியேற்றப் பட்டு விட்டனர். VRS திட்டம் தவிர, புத்தாக்கத் திட்டத்தில் உறுதியளிக்கப் பட்ட வேறு எந்த நடவடிக்கையும் அமுல்படுத்தப் படவில்லை.  சந்தையிலிருந்தும், சொத்துக்கள்  மூலம் நிதிஆதாரத்தை உருவாக்குவதன் மூலமாகவும் நிதி திரட்டுவதற்கு, உறுதிப் பத்திரங்களை BSNL -க்கு வழங்குவதன் மூலம் BSNL -இன் 4 ஜி சேவைகளைத் துவக்குவது ஆகிய பொதுவெளியில் அறிவிக்கப் பட்ட நடவடிக்கைகள் இனிமேல்தான் வெளிச்சம் காண வேண்டியுள்ளது.  புத்தாக்க திட்டத்தில் உறுதியளித்தபடி, BSNL -இன் புத்தாக்கத்திற்கான செயல்பாடுகளை அமுல்படுத்த உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்குமாறு  கோரிக்கை முன்வைக்கப் படுகிறது.
BSNL   நிர்வாகத்தால் தீர்க்கப் படாத பிரச்னைகள்
ஊழியர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து, BSNL நிறுவனத்தின் பிரதான அங்கீகார சங்கமான BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக நிர்வாகத்துக்குக் கடிதங்கள் எழுதி வருகின்றது.  எனினும், BSNL  நிர்வாகம் அப்பிரச்னைகளில் கவனம் செலுத்தாதது மட்டுமல்ல, BSNLEU எழுதியுள்ள கடிதங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதில்லை.  ஊழியர்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு குறைந்த பட்ச அக்கறையைக் கூட BSNL நிர்வாகம் செலுத்தவில்லை என்பது வருந்தத் தக்கது.  பின்வரும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு BSNL நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப் படுகிறது.
1) ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது என்பது BSNL நிர்வாகத்தின் கடைசி முன்னுரிமையாக உள்ளது. மே மாத ஊதியம் இதுவரை வழங்கப் படவில்லை.  ஒவ்வொரு மாதமும் ஊதியத்தை உரிய காலத்தில் வழங்குவது உறுதி செய்யப் பட வேண்டும்.
2) கடந்த ஓராண்டு காலமாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப் படவில்லை.  குறிப்பாக ஊரடங்கு காலத்திற்காக தொழிலாளர் நலத் துறை மற்றும்  நிதி அமைச்சகங்கள் வெளியிட்டுள்ள உத்தரவுகளை BSNL நிர்வாகம் அப்பட்டமாக மீறியுள்ளது. BSNL நிர்வாகத்தால் பெரும் அளவில் மேற்கொள்ளப் பட்டு வரும் ஒப்பந்தத் தொழிலாளர் ஆட்குறைப்பு என்பது, கீழ்மட்டங்களில் இயக்கம் மற்றும் பராமரிப்பு சேவைகளைக் கடுமையாக பாதிக்கும்.  ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதிய நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப் பட வேண்டும் என்றும், அயல்பணியின் மூலம் செய்யப் படும் ஒப்பந்தத் தொழிலாளர் பணி நீக்கம் நிறுத்தப் பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப் படுகிறது.
3) 6.12.2016 தேதியிட்ட DOT கடித எண் :36-11/2015-SR-இன் அடிப்படையில், தபால் துறையானது கோவிட்-19 நோய்க்கு ஆளாகும் ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப் படும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. BSNL- இலும் இத்திட்டம் அமுல்படுத்தப் பட வேண்டும் என்று BSNLEU ஏற்கனவே கோரிக்கை முன் வைத்துள்ளது. இதனை அமுல்படுத்த, நிர்வாகம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப் படுகிறது.
4) ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகள் கூட்டுக் குழுவில் ஏற்கனவே துவக்கப் பட்டுள்ளன.  எனினும். எந்தக் காரணமுமின்றி அது தொடரப் படாத நிலை உள்ளது,  ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடரப் பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப் படுகிறது.
5) 31.1.2020 தேதிப்படியான காலியிடங்களின் அடிப்படையில் பல்வேறு வரையறுக்கப் பட்ட இலாகா போட்டித் தேர்வுகளை (LICE) நடத்த வேண்டும் என BSNLEU ஏற்கனவே கோரிக்கை முன்வைத்துள்ளது, JTO, JAO, JTO(OL), JE, TT, JE(CIVIL), JTO(CIVIL) ஆகிய பதவிகளுக்கான இலாகா தேர்வுகளை  நடத்துவதற்கு உடனடியான நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
6) 26.5.2019 அன்று நடத்தப் பட்ட JTO இலாகா போட்டித் தேர்வுக்கு தகுதி அளவீடுகள் தளர்த்தப் பட வேண்டும் என  BSNLEU. ஏற்கனவே கோரிக்கை முன்வைத்துள்ளது, நியாயமான காரணங்களுடன் இக்கோரிக்கை எழுப்பப் பட்டுள்ளது. இப்பிரச்னையை நிர்வாக உடனடியாக தீர்க்க வேண்டும் என  கோரிக்கை முன்வைக்கப் படுகிறது.
7) பஞ்சாப் மாநிலத்தில் JTO இலாகா போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப் படாமல் உள்ளது,  சட்டச் சிக்கல்களை நீக்கி உடனடியாக முடிவுகள் வெளியிடப் பட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப் படுகிறது.
8) தற்போது TELECOM FACTORY-கள் அவை இருக்கும் மாநிலங்களோடு இணைக்கப் பட்டுள்ளன. அவ்வாறில்லாமல், மும்பை, கொல்கத்தா, ஜபல்பூர் TELECOM FACTORY -களைத் திறமையாக நிர்வகிக்க அவை ஒரே மாநிலமாக உருவாக்கப் பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப் படுகிறது.
9) அதிகாரிகளுக்கு ஏற்கனவே அமுல்படுத்தப் படுத்தப் பட்டுள்ள GROUP TERM INSURANCE (GTI) ஊழியர்களுக்கும் அமுல்படுத்தப் பட வேண்டும். BSNLEU ஏற்கனவே இக்கோரிக்கையை எழுப்பி வந்துள்ளது.
10)    ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப் பட்ட LIC பிரிமியம் தொகை, LIC நிறுவனத்திற்கு செலுத்தப் படாததால், ஊழியர்களுக்குக் கடுமையான பிரச்னைகள் குறிப்பாக கோவிட்-19 காலத்தில் ஏற்பட்டுள்ளன. மேலும் கால தாமதமின்றி BSNL நிர்வாகம் இப்பிரச்னையைத் தீர்க்க வேண்டும்.
11) பணியிலுள்ள ஊழியர்களின் ஊதியத்திலிருந்து கூட்டுறவுச் சங்களுக்காகப் பிடித்தம் செய்யப் படும் தொகை கூட்டுறவுச் சங்கங்களுக்குச் செலுத்தப் படவில்லை. இது ஊழியர்களுக்குக் கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகம் இப்பிரச்னையை உடனடியாகத் தீர்க்க வேண்டும்.
12)  BSNL MRS திட்டத்தின்படி ஊழியர்கள் பணப் பரிமாற்றமில்லாத சிகிச்சையை மருத்துவமனைகளில் பெற முடியவில்லை.  இது ஊழியர்களுக்கு குறிப்பாக கோவிட்-19 காலத்தில் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது, BSNL MRS திட்டத்தின் கீழ் பல்வேறு மருத்துவமனைகளில் பணப் பரிமாற்றமில்லாத சிகிச்சையை ஊழியர்கள் பெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
13) மேலும், கோவிட்- 19 நோய் அச்சுறுத்தல் உள்ளதைக் கணக்கில் கொண்டு, புற நோயாளிக்கான சிகிச்சை வரையறையை 23 நாட்கள் ஊதியத்திலிருந்து 15 நாட்கள் ஊதியமாகக் குறைக்க நிர்வாகம் எடுத்துள்ள முடிவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப் படுகிறது.
14)  SLA அடிப்படையில் அயல்பணிக்கான உத்தரவுகளை நிர்வாகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.  ஒப்பந்ததாரர்கள் தங்கள் லாபத்திற்காக அதிகப் படுத்திக் காண்பிப்பதாகப் பல இடங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப் படுகின்றன.  இது BSNL- ஐ கடுமையாக பாதிக்கும்.  எனவே, SLA அடிப்படையிலான அயல்பணிக்கு அனுமதிப்பதை நிர்வாகம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
15)  7-வது ஊதியக் குழு சிபாரிசுகளின் கீழ் மட்ட ஊதிய விகிதத்தின் அடிப்படையில் தற்காலிக தொழிலாளர்களின் ஊதியம் மாற்றி அமைக்கப் பட வேண்டும்.