16.07.2020 அன்று உணவு இடைவேளையில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திடுக

16.07.2020 அன்று உணவு இடைவேளையில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திட, 06.07.2020 அன்று நடைபெற்ற AUAB கூட்டம் BSNL ஊழியர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது. அன்றைய தினம் தொழிலாளர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 06.07.2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட கோரிக்கைகளும், போராட்ட இயக்கங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

போராட்ட இயக்கங்கள்:-
1) அனைத்து ஊழியர்களும் 16.07.2020 அன்று கருப்பு பேட்ஜ் அணிந்து, 4G டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும், BSNLன் 4G சேவைகள் துவங்க உருவாக்கப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராகவும், 16.07.2020 அன்று மதிய உணவு இடைவேளையில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும்.
2) BSNLன் 4G சேவைகள் விரைவில் துவங்கப்பட வேண்டும் என்கின்ற விஷயத்திலும் விரைவில் BSNL புத்தாக்கம் செய்யப்பட வேண்டும் என்கிற விஷயத்திலும் தலையிட வேண்டும் என 13.07.2020 முதல் 31.07.2020 வரையிலான காலத்தில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் மனு கொடுப்பது.
3) 4G சேவைகளை BSNL விரைவில் கொடுக்க வேண்டும் என்றும், BSNLன் புத்தாக்க திட்டத்தில் கொடுக்கப்பட்ட உறுதி மொழிகளை அமலாக்க வேண்டும் என்றும் 05.08.2020 அன்று ட்விட்டர் பிரச்சாரத்தை மேற்கொள்வது.

கோரிக்கைகள்:-
I) 4G சேவைகளை வழங்க உடனடியாக BSNLக்கு அனுமதி வழங்க வேண்டும்.
அ) 4G சேவை தரவல்ல BTSகளை உடனடியாக மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை BSNL, உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
ஆ) VIII.4 கட்ட டெண்டர் அடிப்படையில், கூடுதலான 4G கருவிகளை வாங்குவதற்கான உத்தரவை உடனடியாக வெளியிட வேண்டும்.
இ) புதிய கருவிகள் வாங்குவது மற்றும் மேம்படுத்துவதில், BSNL மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையில் எந்த ஒரு பாரபட்சமும் காட்டக் கூடாது.
II) BSNLன் புத்தாக்க திட்டத்தில் உள்ள பாண்டுகள் வெளியிடுவதற்கு அரசு உத்தரவாதம் தருவது உள்ளிட்ட முடிவுகளை அரசாங்கம் உடனடியாக அமலாக்க வேண்டும்.
III) சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை BSNL நிர்வாகம் அவசர கதியில் மேற்கொள்ள வேண்டும்.
IV) மாதத்தின் கடைசி வேலை நாளில் ஊதியம் வழங்கப்படுவதை நிர்வாக்ம் உறுதி செய்ய வேண்டும்.
V) கொரோனா தொற்று அபாய காலகட்டத்தில், ஊழியர்களுக்கு EMPANELLED மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சைக்கு நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கொரோனா தொற்றால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு நிர்வாகம் 10 லட்ச ரூபாய் நிதி உதவி தர வேண்டும். தொலை தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின் படி தபால் துறை இது போன்ற திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது.

அனைத்து மாநில மற்றும் மாவட்ட சங்கங்களும், AUABயில் உள்ள இதர தொழிற்சங்கங்களிடம் ஒன்றிணைந்து இந்த போராட்ட இயக்கங்களை முழு வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் முழு விவரங்கள் AUABயின் சுற்றறிக்கையில் உள்ளன.

4G டெண்டர் பிரச்சனையில் கார்ப்பரேட் மீடியாக்கள் மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர்.
BSNLக்கு 4G கருவிகள் வழங்குவதற்கான டெண்டருக்கு TECH MAHENDRA விண்ணப்பிக்கும் என கார்ப்பரேட் மீடியாக்கள் செய்திகளை பரப்பி வருகின்றனர். 06.07.2020 தேதி வெளிவந்த ECONOMIC TIMES பத்திரிக்கையிலும் இந்த செய்தி வந்திருக்கிறது. மேலும் இதில் TECH MAHENDRA நிறுவனம் ITIஐ பங்குதாரராக சேர்த்துக் கொள்ளும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. TECH MAHENDRA, இந்தியாவின் 5வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் அதனிடம் 4G கருவிகளை தயாரிக்கும் தொழில் நுட்பம் இல்லை. அதே சமயம், ITI நிறுவனம், பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து தொலை தொடர்பு கருவிகளை வாங்கி கமிஷனை பெற்றுக் கொண்டு, அதனை BSNLக்கு வழங்கும் தரகு வேலையை தான் செய்து கொண்டுள்ளது என்பது நமக்கு தெரியும். ITI நிறுவனத்திடமும் மொபைல் கருவிகளை தயாரிக்கும் தொழில்நுட்பம் கிடையாது.

இந்த சூழ்நிலையில், கார்ப்பரேட் மீடியாக்கள் பொது மக்களை ஏமாற்றவே நினைக்கின்றனர். BSNLன் 4G டெண்டரை, அரசு ரத்து செய்ததை நியாயப்படுத்தவே இது போன்ற தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. எந்த இந்திய நிறுவனத்திடம் 4G கருவிகளை உருவாக்கும் தொழில்நுட்பம் உள்ளதென்றும், BSNL நிறுவனம் 4G சேவையை துவங்குவதற்கான தேவையை பூர்த்தி செய்யக்க்கூடிய தகுதி அதற்கு உள்ளதா என்பதையும், இந்த கார்ப்பரேட் மீடியாக்கள், இந்திய மக்களிடம் தெளிவாக கூற வேண்டும்.

BSNL Employees Union Nagercoil