சமீபத்தில் நடைபெற்ற ரிலையன்ஸ் தொழிற்சாலை(RIL)யின் 43ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், தனது சொந்த 5G தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்தார். 5G அலைக்கற்றை கிடைத்த ஒரு வருட காலத்திற்குள், இந்தியாவில் உருவாக்கப்பட்ட (MADE IN INDIA) 5G செயல்பாட்டிற்கு வந்து விடும் என அவர் அறிவித்தார். இது தொலை தொடர்பு துறையில் உள்ள வல்லுனர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக ஒரு சில தகவல்களை நாம் கீழே கொடுத்துள்ளோம்.

கடந்த ஆண்டு, 5G முன்னோட்டத்திற்கான முன்மொழிவுகளை வழங்குமாறு தொலை தொடர்பு துறை அனைத்து நிறுவனங்களிடமும் கேட்ட போது, ஜியோ நிறுவனம் தனது மனுவை சாம்சங் நிறுவனத்தோடு இணைந்து வழங்கியது. ஜியோவிற்கான 4G கருவிகளை வழங்கியது சாம்சங் நிறுவனம் தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, தனது 5G முன்னோட்டத்தில் HUAWEI, எரிக்சன் மற்றும் நோக்கியா ஆகிய நிறுவனங்களையும் இணைத்துள்ளதாக ஜியோ நிறுவனம், மார்ச் 2020ல் தெரிவித்தது.

ஆனால், தனது சொந்த 5G தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக ஜியோ நிறுவனம், ஜூலை 2020ல் அறிவிக்கிறது. 2020, மார்ச் மாதத்திற்கு பின் உள்ள மூன்று மாத காலத்தில் ஜியோ தனது 5G தொழில்நுட்பத்தை உருவாக்கி விட்டதா என்பது தான் இப்போது எழும் கேள்வி.

முகேஷ் அம்பானி தனது 5G தொடர்பான இந்த பிரமாண்டமான அறிவிப்பை RILன் 43ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவித்த தினத்தில், மும்பை பங்கு சந்தையில் RILன் பங்குகள் 2 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. முகேஷ் அம்பானியின் 5G தொழில்நுட்ப அறிவிப்பை, அதன் பங்கு தாரர்களே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே இது வெளிக்காட்டுகிறது.

BSNL Employees Union Nagercoil