14 கோடி பேரின் வேலை பறிபோய்விட்டது
24 கோடி கூலித் தொழிலாளர்கள் வாழ வழியில்லை
35 சதவீத சிறு-குறு தொழில்கள் திறக்கப்படும் வாய்ப்பு இல்லை
40 கோடி பேர் கொடிய வறுமையின் பிடியில்
பொதுத்துறைகள் அனைத்தும் தனியார்மயம்
48 லட்சம் மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி முடக்கம்
68 லட்சம் ஓய்வூதியர் அகவிலைப்படி முடக்கம்
22 முறை பெட்ரோல் – டீசல் விலை உயர்வு
151 ரயில் பாதைகள் தனியார்மயம்

மக்கள் விரோத – தொழிலாளர் விரோத அரசுகளுக்கு எதிராக   கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்துக!

மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல்

புதுதில்லி, ஜூலை 23- வரும் ஆகஸ்ட் 9 அன்று “இந்தியா பாதுகாப்பு தினம்” அனுசரித்திடுமாறு மத்தியத் தொழிற் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் இயங்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள் மற்றும் சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. மேலும் ஆகஸ்ட் 18 அன்று நிலக்கரிச் சுரங்கங்களின் வேலைநிறுத்த தினத்தன்று ஆதரவு இயக்கங்களை அனுசரித்திட வேண்டும் என்றும் கூட்டுமேடை அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்தியத் தொழிற்சங் கங்களான சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, டியுசிசி, எஸ்இடபிள்யுஏ, ஏஐசிசிடியு, யுடியுசி மற்றும் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள் மற்றும் சங்கங்கள், வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்கள் இணைந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை, இதர சம்மேளனங்கள் மற்றும் சங்கங் களுடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை களை மேற்கொள்வதற்காக, ஜூலை 8 அன்றும் பின்னர் மீண்டும் 18 ஆம் தேதியன்றும் சந்தித்தன.  கூட்டத்தில், 2020 ஜூலை 3 அன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள் மற்றும் சங்கங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தேசிய எதிர்ப்பு தினம் மகத்தான அளவில் வெற்றி  பெற்றதைப் பாராட்டியது. நாடு முழுவதும் மத்திய அரசின் தேச விரோதக் கொள்கை களுக்கு எதிராகவும், மக்கள் விரோதக் கொள்கை களுக்கு எதிராகவும், தொழிலாளர் விரோத, விவ சாய விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் தொழிலாளர் வர்க்கத்திடம் காணப்படும் கோபாவேசத்தை இது வெளிப்படுத்தியது. அனைத்து மாநிலங்களிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் உட்பட பல்வேறு வடிவங்களில் எதிர்ப்பு இயக்கங் கள் நடைபெற்றுள்ளன. 2020 ஜூலை 2-4 தேதிகளில் மூன்று நாட்கள் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், மத்திய அரசாங்கம் நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்க மேற்கொண்டுள்ள முடிவுகளை எதிர்த்து, நடத்திய அகில இந்திய வேலை நிறுத்தம் வெற்றி பெற்றிருப்பதற்கும் மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது. நிலக்கரிச் சுரங்கங்களில் இயங்கிடும் தொழிற்சங்கங்கள், நிலக்கரிப் படுகைகளை தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான கடைசி நாளான ஆகஸ்ட் 18 அன்று  மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்திருக்கின்றன.

குறைந்த ஊதியம்-குறைந்தளவில் தொழிலாளர்கள்

மேலும் கூட்டத்தின் போது, தற்போது நாட்டில் மீண்டும் தொழிற்சாலைகள் செயல்படத் துவங்கியிருக்கும் சமயத்தில் சில தொழில்பிரிவு களில் அனைத்துத் தொழிலாளர்களும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதையும், மிகவும் குறைந்த சதவீத அடிப்படையிலேயே தொழிலாளர்கள் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார் கள் என்பதையும் அதுவும் குறைந்த ஊதி யத்துடன் வேலைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள் என்பதையும், சமூக முடக்கக் காலத்திற்கு ஊதியம் எதுவும் வழங்க மறுத்துவரும் நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டது. இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை ஒன்றுபட்டு முறியடித்திட வேண்டியது அவசியமாகும்.

வேலையில்லாதோர் விகிதம் அதிகரிப்பு 

ஏர் இந்தியா நிறுவனத்தில் 20 ஆயிரம் ஊழியர்கள் ஆறு மாத கால அளவிற்கு சம்பளம் இல்லா விடுப்பில் செல்லப் பணிக்கப் பட்டிருப்பதும், ஐந்தாண்டு காலத்திற்கு விடுப்பு எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதும் தற்போது அமலில் இருந்துவரும் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளாகும்.  தற்போது நாட்டில் 14 கோடிக்கும் மேலான வர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். இவர்களுடன் தற்போது 24 கோடிக்கும் மேற்பட்ட நாட்கூலித் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் கேசுவல் தொழி லாளர்கள் வாழ்வதற்கான வழியேதுமின்றி இருந்து வருகிறார்கள். நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவுகளில் 30 முதல் 35  சதவீத தொழில்பிரிவுகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் இல்லை என்று அறிவித்திருக் கின்றன. வேலையில்லாதோர் விகிதம் உயர்ந்திருக்கிறது.  சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தன்னுடைய அறிக்கையில் 40 கோடி க்கும் மேற்பட்ட மக்கள் ஆழமான வறுமைக்குள் தள்ளப்பட்டிருப்பதாகக்  கூறியிருக்கிறது. சத்துணவின்மை அதிகரித்தி ருக்கிறது. பட்டினிச் சாவுகள் நாளும் நடை பெறும் எதார்த்தமாக மாறி இருக்கிறது. தொழிலா ளர்களும் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெ டுக்கும் நிலை உருவாகி இருப்பதாக தொழிலா ளர்களைக் கவனித்து வரும் அறிவியலாளர்க ளும், மருத்துவ வல்லுநர்களும் எச்சரித்திருக்கி றார்கள். இப்பிரச்சனைகள் அனைத்தும் தொழி லாளர்களை மிகவும் கோபமடைய வைத்திருக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப் படுத்திட மத்திய அரசு தேவையான நடவடிக்கை களை எடுக்காதது மட்டுமல்ல, சமூக முடக் கத்தை எவ்விதத் திட்டமிடலும் இல்லாது திடீ ரென்று அறிவித்ததன் காரணமாக நான்கு மாதங்கள் வீணடிக்கப்பட்டுவிட்டன. மக்க ளுக்கு, குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்க ளுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்திடவோ, கோவிட்-19க்கு எதிராக களத்தில் நிற்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை யும் அளித்திட வில்லை. அதேபோன்று இந்நெருக் கடியான காலகட்டத்தில் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்கு இன்றிய மையா சேவைகளை வழங்கி வந்த ரயில்வே, பாதுகாப்பு, வங்கி, இன்சூரன்ஸ், டெலிகாம், அஞ்சல் தொழிலாளர்களின் சேவைகளை அங்கீ கரித்திடவும் தவறி இருக்கிறது. கோவிட் 19 பிரச்சனையை மனிதகுலத்திற்கு ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடியாகக் கருதாமல் வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையாக பார்த்து நடவ டிக்கை எடுத்திருக்கிறது. இவற்றின் விளைவாக பல கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவ சாயிகள், சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள மக்கள் சொல்லொண்ணா விதத்தில் துன்பதுய ரத்திற்கு ஆளாகியுள்ளனர். இவர்களைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது அரசாங்கம், கார்ப்ப ரேட்டுகள் மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்க ளின் பக்கம் மட்டுமே நிற்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே, பாதுகாப்புத்துறை, துறைமுகங்கள், நிலக்கரி, ஏர் இந்தியா, வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமல்லாது  விண்வெளி, அறி வியல் மற்றும் அணு எரிசக்தித்துறை உட்பட அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்த்திட அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை எதிர்த்திட வேண்டும் என்று மத்தியத் தொழிற்சங்கங்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. தன்னிறைவு என்று முழங்கிக்கொண்டே நாட்டின் இயற்கை வளங்களையும் வர்த்தக நிறுவனங்கள் பல வற்றையும் இந்திய மற்றும் அந்நிய கார்ப்பரேட்டு களிடம் அளித்திட எவ்விதமான கூச்சநாச்ச முமின்றி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

முதலாளிகளுக்கு ஆதரவாக அரசின் வெட்கமற்ற நடவடிக்கை

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் அக விலைப்படி முடக்கம், 68 லட்சம் ஓய்வூதியதா ரர்களின் அகவிலைப்படி முடக்கம் ஆகி யவை மாநில அரசு ஊழியர்களின் ஊதியங்களி லும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இவற்றுக்கு எதிராக மத்தியத் தொழிற்சங்கங்க ளும், அரசு ஊழியர் அமைப்புகளும் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தபோதும், மத்திய அரசாங்கம் தன் முடிவினை விலக்கிக் கொள்ளவில்லை. வருமானவரி வரம்புக்குள் இல்லாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் 7500 ரூபாய் பணம் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக் கையையும் அரசாங்கம் ஏற்கவில்லை. சமூக  முடக்கக் காலத்தில் ஊழியர் எவரையும் வேலை நீக்கம் செய்யக்கூடாது என்கிற அரசின் உத்தர வுக்கு எதிராக சிலமுதலாளிகள் உச்சநீதிமன்றத் திற்குச் சென்றபோது அரசாங்கம் எவ்வித வெட்கமும், நாணமுமின்றி தன் உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டது.

22 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு

ரயில்வேயில் நன்கு லாபம் வரக்கூடிய 151 ரயில் பாதைகளை, ரயில்வே ஊழியர்களைப் பயன்படுத்தி, தனியார் கொள்ளை அடிப்பதற்கு வசதி செய்துகொடுக்கும் நாசகரமான முடி வினை சமீபத்தில் எடுத்திருக்கிறது.  வேலை யில்லா இளைஞர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் அரசின் பணி யிடங்களை சரண் செய்வதையும், புதிய பணி யிடங்களை உருவாக்குவதற்குத் தடை விதித்தி ருப்பதையும் தொடர்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையை கடந்த இரு மாதங்களில் 22 தடவைகள் உயர்த்தி இருக்கி றது. இது மக்கள் மீதான மற்றுமொரு மாபெரும் அடியாகும். இத்தகைய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கை களை முறியடித்திட அனைத்துத் தொழிற் சங்கங்களும், தொழிலாளர்கள்/ஊழியர்கள் அமைப்புகளும் ஒன்றுபட்டு நின்று போராட வேண்டியது அவசியமாகும். அதன்மூலம் தொழி லாளர் வர்க்கம் இதுநாள்வரை பெற்று வந்த கூட்டுபேர சக்தி, நாகரிகமான பணி நிலைமை கள், ஊதியங்கள் மற்றும் எதிர்காலப் பாது காப்பு முதலியவற்றுக்கான உரிமைகளைப் பாது காத்திட வேண்டும். இந்த அரசாங்கம், தொழிலா ளர்கள் மற்றும் மக்களின் அடிப்படை மனித உரி மைகள் மற்றும் தேவைகளுக்கு எதிராக மிகவும் கொடூரமான முறையிலும் கருணையற்ற விதத்திலும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது; இத்தகு நட வடிக்கைகளுக்கு ஒத்துப்போகவும் முடியாது.

எனவே, மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள்/சங்கங்களின் கூட்டுமேடை அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராகப் போராட் டங்களை முடுக்கிவிட வேண்டும் என்று அறை கூவல் விடுத்திருக்கிறது. இப்போராட்டங்கள் அனைத்துத் துறைகளிலும் மற்றும் நாடு தழுவிய அளவிலும் தீவிரமாகவும், தொடர்ந்தும் நடத்தப்பட வேண்டும். இவற்றுக் காக கூட்டுமேடை கீழ்க்கண்டவாறு போராட்ட நடவடிக்கைகளை வகுத்துள்ளன.

1 வெள்ளையனே வெளியேறு தினமான ஆகஸ்ட் 9 அன்று “இந்தியா பாதுகாப்பு தினம்” அனுசரித்திட வேண்டும். அன்றைய தினம் நாடு முழுவதும் சத்தியாக்கிரகம், சிறை நிரப்பும் போராட்டம் மற்றும் பல்வேறு வடிவங்களிலும் தீவிரமான கிளர்ச்சிப் போராட்டங்கள் அனை த்துப் பணியிடங்களிலும், தொழில் மையங்க ளிலும், மாவட்டத் தலைநகரங்களிலும், கிராமப் புறங்களிலும் நடத்தப்பட வேண்டும்.

2 2020 ஆகஸ்ட் 18 அன்று நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடு கிறார்கள். அன்றைய தினம் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சாத்தியமான இடங்களில் ஒருமைப்பாடு இயக்கங்கள் நடத்திட வேண்டும்.

3 ராணுவத்துறையில் பணிபுரியும் தொழி லாளர்களில் 99 சதவீதத்தினரைப் பிரதிநிதித் துவப்படுத்தும் சங்கங்கள்/சம்மேளனங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்துள்ளன. அவர்கள் 2020 செப்டம்பர் மத்திய வாக்கில் வேலைநிறுத்தத்தில் இறங்கலாம். அன்றையதினமே மத்தியத் தொழிற்சங்கங்க ளின் கூட்டுமேடை சார்பாகவும் அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நட வடிக்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடலாம் என யோசித்துக் கொண்டி ருக்கின்றன. அந்தத் திசைவழியில் தயாரிப்பு வேலைகளை முடுக்கிவிட வேண்டும்.

4 அங்கன்வாடி ஊழியர்கள், ‘ஆஷா’ ஊழி யர்கள், மதிய உணவு ஊழியர்கள் போன்று திட்டப்பணிகளில் பணியாற்றிவரும் ஊழி யர்கள் வரும் ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்திருக்கின்றனர்.  அது, 2020 ஆகஸ்ட் 9 அன்று நடைபெறவுள்ள நாடு தழுவிய போராட்டங்களுடன் ஒருங்கி ணைந்திடும். அவர்களின் போராட்ட நடவடிக்கை க்கு கூட்டுமேடையில் அங்கம் வகிக்கும் அமைப்புகள் ஆதரவு இயக்கங்களை நடத்திட வேண்டும்.

5 ரயில்வேயைத் தனியாருக்குத் தாரை  வார்ப்பதற்கு எதிராக ரயில்வேயில் செயல்படும் சங்கங்களுடன் இணைந்து கூட்டு இயக்கங்க ளை நடத்திட திட்டமிட வேண்டும். அவர்க ளின் தயாரிப்புப்பணிகளைப் பொறுத்து பொருத்தமான காலத்தில் இயக்கங்களை நடத்திட வேண்டும்.

6 இவை தொடர்பாக ஒரு பிரச்சாரமாக குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட இருக்கும் மனு, அனைத்துத் தொழிற்சங்கங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. அவற்றின் மீதான ஆலோசனைகள் அவற்றிடமிருந்து பெறப் பட்டபின், அந்த மனு இறுதிப்படுத்தப்படும். அதே போன்று முறைசாராத் தொழிலாளர்களின் பிரச்ச னைகளை மையப்படுத்தி மற்றுமொரு மனுவும் தயாரித்திட முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கி றது.  இவற்றுக்காகவும், ஆகஸ்ட் 9 தினத்தை வெற்றிகரமாக்கிடவும் கூட்டு மேடை மீண்டும் ஜூலை 27 அன்று கூடுவது என்றும் முடிவு செய்திருக்கிறது.

கூட்டுமேடையின் அறைகூவலை அனைத்து சங்கங்களும் மாவட்ட அளவிலும், துறைகள் அளவிலும் எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

BSNL Employees Union Nagercoil