BSNLன் 4G டெண்டர் ரத்து செய்யப்படுவது என்பது, BSNLக்கு 4 G தொழில்நுட்பம் மறுக்கப்படும் சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் என தனது நியாயமான சந்தேகத்தை AUAB முன்னரே தெரிவித்திருந்தது. 4G தொழில்நுட்பத்தை பெறுவதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோவிற்கு, BSNL கடுமையான போட்டியை தந்துவிடக்கூடாது என்பதற்காகவே, இந்த சதித்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட 4G கருவிகளை, BSNL முதலில் முயற்சித்து பார்க்கும்படி DoT கூறும் என எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவிகளை கொண்டு 10 முதல் 20 டவர்களை நிர்மாணித்து அதனை CORE NETWORK உடன் இணைக்கலாம் என கூறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தயாரிப்பாளர்களிடம் தற்போது ‘TURN KEY SETUP” இல்லை என ஒரு DoT அதிகாரி கூறியுள்ளது மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயமாகும். ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் மையத்திலிருந்து, ஒரு முனையிலிருந்து மறு முனை வரையிலான, ரேடியோ மற்றும் மைய தேவைகள் உட்பட்ட வலைத்தளத்தை TURN-KEY SETUP வழங்கும்.

BSNLக்கு 4 G கருவிகளை வழங்கவும், தொலைதொடர்பு பொதுத்துறை நிறுவனத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவும் கூடிய தகுதி, இந்தியாவில் எந்த ஒரு நிறுவனத்திடமும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. பின் ஏன் இந்த நாடகம்? BSNLக்கு 4G தொழில்நுட்பம் மறுப்பதை தவிர இதற்கு வேறு எந்த ஒரு காரணமும் இல்லை.