BSNLன் புத்தாக்க திட்டத்தை அமலாக்க BSNL நிர்வாகத்தால் இயலவில்லை. 4G சேவையை துவங்க BSNLஆல் இயலவில்லை. அதன் காரணமாக BSNLன் வருவாயை உயர்த்துவ் வழிவகைகளை கண்டுபிடிக்க நிர்வாகத்தால் முடியவில்லை. விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்பட்டால், லாபமீட்டும் நிறுவனமாக மாறிவிடும் என்று CMD BSNLன் கூற்றுக்கள் அனைத்தும் பொய்யாகி போய்விட்டன. 79,000 ஊழியர்களை வெளியேற்றிய பின்னரும், நிர்வாகத்தால் மீதமுள்ள ஊழியர்களுக்கு, உரிய தேதியில் ஊதியம் வழங்க இயலவில்லை. வாடகை தாரர்களுக்கும், ஒப்பந்த தாரர்களுக்கும், மருத்துவமனைகள், மிகட்டணம் உள்ளிட்டவைகளை கூட செலுத்த இயலவில்லை.

எனவே, தன்னுடைய இயலாமையை மறைக்க ஒப்பந்த ஊழியர்களை கடுமையாக குறைக்க ஆரம்பித்தது. மீதமுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் நீக்க வேண்டும் என ஓரிரண்டு நாட்களுக்கு முன் நிர்வாகம், அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. . மீதமுள்ள ஒப்பந்த ஊழியர்களும் நீக்கப்பட்டார்கள் என்றால், BSNL சேவைகள் அதல பாதாளத்திற்கு போய்விடும். இது சிந்திக்காமல் எடுக்கப்பட்ட முடிவு.

இந்த கடிதத்தில் உள்ளவற்றிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, BSNL ஊழியர் சங்கம் BSNL CMDக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த பிரச்சனையில் ஒரு அர்த்தமுள்ள முடிவினை எட்ட BSNLல் உள்ள ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களுடன், காணொளி காட்சி மூலம் விவாதிக்க வேண்டும் எனவும் BSNL ஊழியர் சங்கம் நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.