கொரோனா தொற்று அபாயம் உலகை ஆட்டி படைத்து வரும் இந்த நேரத்தில், உலக மயமாக்கல் கொள்கைகளால், பொது சுகாதாரத்தை கைவிட்ட நாடுகளில் அதன் தொற்று அதிகரித்து வருகிறது. அந்த பட்டியலில், அமெரிக்கா ஏகாதிபத்தியம் முதலிடத்தை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்திற்கு இன்றைய தினம், (07.09.2020) இந்தியா முன்னேறியுள்ளது(?).

இன்றைக்கும் மத்திய ஆட்சியாளர்கள், தாங்கள் பலவற்றை சாதித்து விட்டதாக ஜம்பம் அடித்துக் கொண்டுள்ளனர். தற்போது வந்துள்ள புதிய செய்தி ஒன்று உண்டு. கொரோனா தொற்றின் காரணமாக உலகில் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளன. 2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் உலகில் உள்ள நாடுகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. எதில் தெரியுமா? உலகிலேயே மிக மோசமான மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியை இந்தியா பெற்றுள்ளது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது (-) 23.09%ஆக உள்ளது. உலகில் மற்ற நாடுகள் எல்லாம் எதிர்மறை வளர்ச்சி விகித(NEGATIVE GROWTH)த்தில் உள்ள போது மக்கள் சீனம் மட்டும், (+)3.2% என்கிற நேர்மறை வளர்ச்சி(POSITIVE GROWTH)ல் உள்ளது. இதர நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் பின் வருமாறு:-

இந்தியா : (-) 23.9%
இங்கிலாந்து : (-) 20%
பிரான்சு : (-) 13.8%
இத்தாலி : (-) 12.4%
கனாடா : (-) 12%
ஜெர்மனி : (-) 12.1%
அமெரிக்கா : (-) 9.5%
ஜப்பான் : (-) 7.6%