அன்பார்ந்த தோழர்களே,

இன்று சென்னை தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு BSNLEU மற்றும் TNTCWU மாநில சங்க நிர்வாகிகளின் உண்ணாவிரதம் சிறப்பாக நடைபெற்றுthu.

இதற்கிடையில் GM(HR) பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். மாநில சங்கத்தின் சார்பாக தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் CS, தோழர் K.சீனிவாசன் CT மற்றும் தோழர் M.பாபு ACS ஆகியோர் பங்கேற்றனர்.

நமது கோரிக்கைகளின் முக்கியமானதான ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது தொடர்பாக நமது ஆழ்ந்த எதிர்ப்பை பதிவு செய்தோம். அதற்கு நமது பொதுமேலாளர் பதிலளிக்கையில், தற்போது status quo maintain செய்ய வேண்டும் என்கின்ற RLC(C ) உத்தரவை கார்ப்பரேட் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், அங்கிருந்து பதில் வரும் வரை பணி நீக்கம் செய்யப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.

அதன் காரணமாக நாளை சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற இருந்த பெருந்திரள் முறையீடு ஒத்தி வைக்கப்படுகிறது என இரண்டு மாநில சங்கங்களும் முடிவு செய்துள்ளது.

தோழர்களே, இந்த ஒத்தி வைப்பு தற்காலிகமானது தான். நமது கோரிக்கைகளுக்கு மாறாக ஏதாவது நிர்வாகம் முடிவு செய்யும் என்றால், உடனடியாக நமது பெருந்திரள் முறையீடு நடைபெறும்.

எனவே நமது போராட்ட வாளின் கூர் மழுங்காமல் பார்த்துக் கொள்வோம். அதுவரை நமது கோபத்தீயை அக்கினிக் குஞ்சாக பாதுகாப்போம்.

வாழ்த்துக்களுடன்,
A.பாபு ராதாகிருஷ்ணன் CS BSNLEU

C.வினோத்குமார் CS TNTCWU