நிர்வாகம் எடுத்த இரட்டை நிலைபாட்டின் காரணமாக 07.10.2020 அன்று நடைபெற வேண்டிய தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெறவில்லை. முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கமான BSNL ஊழியர் சங்கத்திற்கு, தனது சங்க உறுப்பினர் அல்லாதவரை கவுன்சில் உறுப்பினராக நியமிக்கும் உரிமையை நிர்வாகம் மறுத்துள்ளது. ஆனால், இரண்டாவது அங்கீகரிக்கப்பட்ட சங்கம், தனது உறுப்பினர் அல்லாத ஒருவரை தற்போது நியமித்த போது, அதனை நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள சிலர், தங்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து விளையாடிய சித்து விளையாட்டு. அதனால், BSNL ஊழியர் சங்கம், தேசிய கவுன்சிலை புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

எனவே, 2013ஆம் ஆண்டு, கேரள உயர்நீதிமன்றம் கொடுத்த வழிகாட்டுதலின் அடிப்படையில், தேவையான சரிபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என 08.10.2020 அன்று BSNL ஊழியர் சங்கம் Director (HR) அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.