நிர்வாகம் உருவாக்கிய தேவையற்ற பிரச்சனையின் காரணமாக, 07.10.2020 அன்று காணொளி காட்சி மூலமாக நடைபெற இருந்த 39ஆவது தேசிய கவுன்சில் கூட்டம், நடைபெற முடியாமல் போனது. ஆனால் இதனை ஒரு சில நபர்கள், BSNL ஊழியர் சங்கத்தை தாக்க பயன்படுத்துகின்றனர். BSNL ஊழியர் சங்கத்தினை அசிங்கப்படுத்தும் நோக்கத்தோடு பல WHATSAPP செய்திகள் பரப்படுகின்றன. அவர்களின் துஷ்பிரச்சாரமும், நமது சங்கத்தின் பதிலும் கீழே தரப்பட்டுள்ளன.

(1) துஷ் பிரச்சாரம் :- BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலரால் தான் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற முடியாமல் போனது. அதன் காரணமாக ஊழியர்களின் முக்கியமான பிரச்சனைகள் விவாதிக்க முடியவில்லை.

பதில்:- இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில், மற்றவர்கள், அதை பற்றி சிந்திக்கக் கூட முடியாமல் இருந்த நிலையில், BSNL ஊழியர் சங்கம் தான் காணொளி காட்சி மூலமாக தேசிய கவுன்சில் கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. இந்த கோரிக்கையை முன்வைத்து, 03.08.2020 தேதி BSNLEU/204(NC) என்கின்ற கடிதம் மூலம் BSNL ஊழியர் சங்கம், DIRECTOR(HR)க்கு கடிதம் எழுதியது. தொடர்ந்து, DIRECTOR(HR), Sr.GM(SR) உள்ளிட்டவர்களோடு விவாதித்து, காணொளி காட்சி மூலம் தேசிய கவுன்சில் கூட்டம் நடத்த சம்மதிக்க வைத்ததும், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தான். இவை அனைத்தும், நிர்வாகத்துடன் ஊழியர்களின் பிரச்சனைகளை விவாதிக்கவே, BSNL ஊழியர் சங்கம் எடுத்த முயற்சிகள். எனவே இது போன்று BSNLஊழியர் சங்கத்தை குற்றம் சாட்டுவது, கேலிக்குரியது மட்டுமல்ல, சந்தர்ப்பவாதமும் தான்.

(2) துஷ் பிரச்சாரம்:- ஒரு குறிப்பிட்ட அமைப்பின் தலைவர், தேசிய கவுன்சில் உறுப்பினராக வருவதை BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யுவால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

பதில்:- இது முற்றிலும் ஒரு துஷ்பிரச்சாரமாகும். தேசிய கவுன்சிலில் எந்த ஒரு நபரின் முன்மொழிவிற்கும் BSNL ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என எழுத்து பூர்வமான கடிதம் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. தனது சங்க உறுப்பினர் அல்லாத ஒருவரின் பெயரை தேசிய கவுன்சில் உறுப்பினராக முன்மொழிய NFTEக்கு உரிமை வழங்கப்பட்டுள்ள போது, அதே உரிமையை BSNLஊழியர் சங்கத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே BSNL ஊழியர் சங்கத்தின் கோரிக்கை. இல்லையென்றால், அது ஒரு பாரபட்சமாகும். அதனை ஏற்றுக் கொள்ள இயலாது.