ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளன்று, அந்தந்த மாதத்தின் ஊதியம் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக வற்புறுத்தி வருகின்றது. ஆனால், இந்த விஷயத்தில் BSNL நிர்வாகம், தனது பொறுப்பை தொடர்ந்து தட்டிக்கழித்து வருகின்றது. உரிய தேதியில் ஊதியத்தை தர வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், மீண்டும் ஒரு கடிதத்தை, CMD BSNLக்கு எழுதியுள்ளது.

பூஜா திருவிழாக்கள், செப்டம்பர் 23ஆம் தேதி துவங்க உள்ளதால், அதனை கொண்டாட ஊழியர்களுக்கு உதவும் வண்ணம், செப்டம்பர் மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரப் பட்டுள்ளது.