BSNL நிர்வாகம் தனது CDA விதிகளில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, 30 வருட சேவை முடித்தவர்களையும், 50/55 வயதுடையவர்களையும், 3 மாத ஊதியத்தை கொடுத்தோ அல்லது 3 மாத அறிவிப்பு கொடுத்தோ ஓய்வு பெறச்செய்யலாம் என்கிற மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த மாற்றத்தை BSNL ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்ப்பதோடு, அதனை திரும்ப பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கடைபிடித்த கொடூரமான சட்டங்களின் ஒரு பகுதி தான் இது. மத்திய மோடி அரசாங்கம் இந்த சட்டத்தை கடுமையாக அமல் படுத்த துடிக்கிறது. இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என மத்திய தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொண்டதோடு, நவம்பர் 26 அன்று நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகளில் ஒன்றாக அதனையும் இணைத்துள்ளது.