புதுதில்லி:
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இயங்கிடும்எட்டு சங்கங்களும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்,மேலும் மத்தியத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள  7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நவம்பர் 26 அன்று நடைபெறும்அகில இந்திய வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அபிமன்யு, என்எப்டிஇ பொதுச்செயலாளர் சி.எஸ். சிங் உட்பட எட்டு சங்கங்களின் நிர்வாகிகளும் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் புதுப்பிப்பது என்பது இப்போதும் ஒரு தொலைதூரக் கனவாகவே இருக்கிறது. ஏனெனில் அரசாங்கம் இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வாறு எடுக்காதது மட்டுமல்ல, பிஎஸ்என்எல் நிறு
வனத்திற்கு 4ஜி அலைவரிசையை அளிப்பதற்குப் பல்வேறுவிதமான தடைக்கற் களையும் போட்டிருக்கிறது. இதர டெலிகாம்நிறுவனங்களுக்கு அளித்துள்ள சலுகை களை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அளிக்க மறுக்கிறது. இவ்வாறு தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக நின்றுகொண்டு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எதிராக சதி செய்துகொண்டிருக்கிறது.

பிஎஸ்என்எல்ஐ பலி வாங்கும் மோடி அரசு
மத்திய அரசாங்கம், பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற ஒரு சூழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையிலேயே இவற்றைச் செய்துகொண்டிருக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மத்திய அரசாங்கம் ரயில்வேயை,பாதுகாப்புத்துறை துப்பாக்கித் தொழிற்சாலைகளை, பிபிசிஎல் நிறுவனத்தை, பொதுத்துறை வங்கிகளை, எல்ஐசி-யை, நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாரிடம் தாரை வார்த்திடஅதிவேகமாக நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது.  அரசாங்கம் இவ்வாறுபொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் முடிவுகளை மேலேகுறிப்பிட்டுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின்கீழ் செயல்படும் எட்டு சங்கங்களும் கடுமையாக எதிர்க்கிறோம். மத்தியத் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள ஏழு அம்சக் கோரிக்கைகளுடன் நாங்களும் எங்களை இணைத்துக்கொள்கிறோம்.

கோரிக்கைகளை நிறைவேற்றுக!
இத்துடன் எங்கள் சங்கத்தின் சார்பில்கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை நிறைவேற்றச் செய்வதற்காகவும், மேலும் மத்தியத் தொழிற்சங்கங்களின் 7 அம்சக் கோரிகைககளை வலியுறுத்தியும் நவம்பர் 26 அகில இந்திய வேலைநிறுத்தத்தில் எங்களையும் இணைத்துக்கொள்கிறோம்.

                         *******************  

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் 

1.4ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கும் எங்களுக்கும் பாகுபாடு காட்டக்கூடாது.

2.மூன்றாவது ஊதியத் திருத்தத்தை 1.1.2017 முதல் அமல்படுத்த வேண்டும்.

3.ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்வதையும், வகைதொகையின்றி அவுட்சோர்சிங் விடுவதையும் நிறுத்த வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் திரும்பவும் வேலைக்கு எடுத்துக்கொண்டு அவர்களின் ஊதிய நிலுவைகளை வழங்கவேண்டும்.

4.1.1.2017 முதல் ஓய்வூதியத்தைத் திருத்தம் செய்து அமல்படுத்த வேண்டும்.

5.அதிகாரிகள் அல்லாதவர்களுக்கு புதியபதவி உயர்வுக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

6.பிஎஸ்என்எல் ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும்போது ரொக்கப் பணம் எதுவும் அளிக்காது சிகிச்சை செய்வதை உத்தரவாதப்படுத்த வேண்டும். அஞ்சல்துறை யில் அளித்திருப்பதுபோல கோவிட்.19ஆல் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு 10லட்சம் ரூபாய் ரொக்க இழப்பீடு வழங்கவேண்டும்.

7. அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு குரூப் டெர்ம் இன்சூரன்ஸ் அமல்படுத்த வேண்டும்.

8.நேரடியாக தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வூதியப் பயன்பாடு களை அமல்படுத்த வேண்டும்.

9. கேசுவல் தொழிலாளர் ஊதியங்கள் திருத்தத்தை அமல்படுத்தவேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ள னர்.  (ந.நி.)