தேசிய கவுன்சில் நடைபெறுவதில் ஒரு முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என BSNL CMD மற்றும் DIRECTOR(HR) ஆகியோருக்கு BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக கடிதம் எழுதிக் கொண்டுள்ளது. இது தொடர்பாக BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு, DIRECTOR(HR) அவர்களுடன் ஏற்கனவே விவாதித்துள்ளார்.
இது தொடர்பாக மீண்டும் 30.12.2020 அன்று நமது பொதுச்செயலர், Sr.GM(SR) திருA.M.குப்தா அவர்களிடம் ஒரு நீண்ட நெடிய விவாதத்தை நடத்தியுள்ளார். கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தோழர் P.அபிமன்யு அவர்கள் கோரியுள்ளார். பொதுச்செயலரின் வாதங்களை பொருத்தமாக கவனிப்பதாக Sr.GM(SR) பதிலளித்தார்.