2019 ஏப்ரல் முதல் டிசம்பர்வரையிலான 9 மாத ஏற்றுமதியைக் காட்டிலும், 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதகால ஏற்றுமதி 15.8 சதவிகிதம் குறைந்துள்ளது.2019 ஏப்ரல் முதல் டிசம்பர்வரை 238.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இந்தியாவின் ஏற்றுமதி இருந்தது. இது தற் போது 200.55 புள்ளிகளாக சரிந்துள்ளது.அதேபோல, 2019 டிசம்பரில் மட்டும் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 27.11 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில்,அதுவும் 2020 டிசம்பரில் 26.89பில்லியன் டாலர்களாக குறைந்து, 0.8 சதவிகித சரிவைச் சந்தித் துள்ளது.ஆனால், இதே காலத்தில் நாட்டின் இறக்குமதி அதிகரித்துள்ளது. 2020 நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் இறக்குமதி 29.08 சதவிகிதம் குறைந்து 258.29 பில்லியன் டாலராக உள்ளது. இதுவே 2019-20 ஏப்ரல் – டிசம்பர் மாதங்களில் 364.18 பில்லியன் டாலர்களாக இருந்தது.

ஒப்பீட்டளவில் கடந்தாண்டை விட நடப்பாண்டில் இறக்குமதி குறைந்திருந்தாலும், ஏற்றுமதி அதிகரிக்கவில்லை.2019 டிசம்பர் மாதத்தை விட 2020 டிசம்பரில் தானியங்கள் (262.62 சதவிகிதம்), எண்ணெய்உணவுகள் (192.60 சதவிகிதம்), இரும்புத் தாது (69.26 சதவிகிதம்), தானியங்கள் தயாரிப்பு மற்றும் இதர பதப்படுத்துதல் பொருட் கள் (45.41 சதவிகிதம்), தரைவிரிப்பு உள்ளிட்ட சணல் உற்பத்தி (21.93 சதவிகிதம்) என ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளது.

இவ்வாறு ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்ததால், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையும் 2020 டிசம்பரில் 25.78 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 12.49 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தவர்த்தக பற்றாக்குறை, 2020 டிசம்பரில் 15.71 பில்லியன் டாலராகஉள்ளது. 2020 ஜூலை மாதத்துக்குப் பிறகு இந்தியா மிகப் பெரிய வர்த்தகப் பற்றாக்குறையை இப்போதுதான் சந்தித்துள்ளது.