நிறுவனத்தின் முன்னேற்றம் தொடர்பாக, ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களோடு, BSNL CMD தொடர்ச்சியாக விவாதிப்பது என்பது BSNLல் கடந்த காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
ஆனால் BSNL CKDஆக திரு P.K.புர்வார் பதவி ஏற்ற நாளிலிருந்து, அந்த பழக்கம் கைவிடப்பட்டு விட்டது. BSNLன் பொருளாதார மேம்பாட்டிற்கு, இது போன்ற விவாதங்கள் அவசியம் என்பதை BSNL CMD திரு P.K.புர்வார் அவரக்ளிடம் BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதற்கான காரண காரியங்களை எல்லாம் விளக்கி BSNL ஊழியர் சங்கம் மீண்டும் ஒரு கடிதத்தை BSNL CMDக்கு எழுதியுள்ளது.