ஊழியர்களுக்கு மூன்று தவணை IDAக்களை முடக்கியுள்ளதிற்கு எதிராக, கேரள உயர் நீதிமன்றத்தில் BSNL ஊழியர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று (07.01.2021) விசாரணைக்கு வந்தது. தங்களது வாதத்தை முன்வைக்க BSNLன் வழக்கறிஞர் ஒரு வார காலம் அவகாசம் கேட்டார். எனினும், நீதிமன்றம் அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளாமல், மீண்டும் நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மீண்டும் அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும்.