ஏற்கனவே தெரிவித்தபடி, மூன்று தவணை IDA முடக்கத்திற்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில், BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்றைய தினம் (08.01.2021) நடைபெற்றது. BSNL ஊழியர் சங்கத்தின் வழக்கறிஞர் திரு V.V.சுரேஷ் தனது வாதங்களை இன்று முன் வைத்துள்ளார். அரசாங்கத்தின் சார்பாக வந்திருந்த ASSISTANT SOLICITOR GENERAL, எழுத்து பூர்வமான பதிலை தருவதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டுமென நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. வழக்கு மீண்டும் அடுத்த வராம் விசாரணைக்கு வரும்.