ஒவ்வொரு மாதமும், ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதுகிறது. ஆனாலும், நிர்வாகம், ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் தர தவறுகிறது. மீண்டும், இன்று (12.01.2021), BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. அதில், மகரசங்கராந்தி, பொங்கல் மற்றும் லோஹரி பண்டிகைகளை தொழிலாளர்கள் கொண்டாட வேண்டி இருப்பதால், டிசம்பர் மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.