BSNL நிறுவனத்தின் பொருளாதார புத்தாக்கத்திற்காக, ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களுடன் எந்த ஒரு விவாதத்தையும் நடத்தாது தொடர்பாக, 07.01.2021 அன்று BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில், CMD BSNL திரு P.K.புர்வார், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, BSNLல் உள்ள ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் ஆக்க பூர்வமான செயல்பாட்டினை, அந்தக் கடிதத்தில் பாராட்டியுள்ளார். மேலும் அனைவரின் கடுமையான உழைப்பின் காரணமாக இந்த நிதியாண்டின் முதல் பாதியில், வரிகளுக்கு முந்தைய கணக்கீட்டில் லாபம் ஈட்டியுள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களின் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை வரவேற்பதாகவும் அவர் கூடுதலாக தெரிவித்துள்ளார்.
BSNL ஊழியர் சங்கத்திற்கு CMD BSNL பதில்- நிறுவனத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வரவேற்றுள்ளார்.
by bsnleungc | Jan 12, 2021 | செய்திகள் | 0 comments
