TSMலிருந்து நேரடியாக டெலிகாம் டெக்னீஷியன்கள் ஆகியுள்ள தோழர்களுக்கு ஜனாதிபத்திய உத்தரவு வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துக் கொண்டுள்ளது. இன்று (11.01.2021), இது தொடர்பாக Sr.GM(Estt) திரு சௌரப் தியாகியுடன் நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு விவாதித்தார். கார்ப்பரேட் அலுவலகம் அதற்கான கோப்பினை DoTயின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளதாக, Sr.GM(Estt.), நமது பொதுச்செயலரிடம் தெரிவித்தார். தற்போது, RMகளாக பதவி நியமனம் பெறாமல், நேரடியாக டெலிகாம் டெக்னீசியன்களாக பதவி உயர்வு பெற்ற TSM தோழர்களுக்கு, ஜனாதிபத்திய உத்தரவு வழங்குவது தொடர்பாக, DoT ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இந்த பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே, BSNL ஊழியர் சங்கம் தொலை தொடர்பு துறையின் செயலருக்கும், MEMBER (SERVICES)க்கும் கடிதம் எழுதியுள்ளது. மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக DoTயிடம், BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தும்.