09.02.2021 அன்று BSNL வழக்கறிஞர் தனது பதில் மனுவை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், BSNL நிர்வாகமும், அங்கீகரிக்கப்பட்ட சங்கமும் கையெழுத்திட்ட ஊதிய உடன்பாட்டின் படி, IDA உயர்வு தொடர்பாக DPE அறிவிப்பு வெளியிட்ட பின்னரே ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது வரை 01.10.2020 முதல் அதிகரிக்கப்பட்ட IDA தொடர்பான உத்தரவை DPE இன்னமும் வெளியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வழக்கு விரைவில் விசாரணைக்கு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக BSNL ஊழியர் சங்கத்தின் வழக்கறிஞர், நமது தலைவர்களிடம் கூறியுள்ளார்.