உண்ணாவிரத போராட்டத்தை தடை செய்வது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் விதி எண் 19(1)(b)ல் வழங்கப்பட்டுள்ள கூட்டம் கூடும் உரிமையை மீறும் செயலாகும்- BSNL CMD க்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்

உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் மற்றும் சில முக்கியமான பிரச்சனைகளில் தீர்வு காண வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று (18.02.2021) நாடுமுழுவதும், உண்ணாவிரத போராட்டத்தை BSNL ஊழியர் சங்கம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

உண்ணா விரத போராட்டம் என்பது, வேலை நிறுத்தம் தான் என 17.02.2021 மாலை, கார்ப்பரேட் அலுவலகம், அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. மேலும், BSNLல் உண்ணாவிரதம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களையும் நிர்வாகம் தடை செய்துள்ளது.

இந்தக் கடிதம் வெளியிட்டுள்ளதை எதிர்த்து BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு ஒரு விரிவான கடிதத்தை 18.02.2021 அன்று எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், தொழில் தகராறு சட்டம், 1947ல் எந்த ஒரு இடத்திலும், உண்ணாவிரத போராட்டம் என்பது வேலை நிறுத்தம் தான் என சொல்லப் படவில்லை என்பதை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும், தர்ணா, உண்ணாவிரதம் போன்ற இயக்கங்களை தடை செய்வதன் மூலம், இந்திய அரசியல் அமைப்பு சட்ட விதி எண் 19(1)(b) வழங்கியுள்ள தொழிலாளர்களின் கூட்டம் கூடும் உரிமையை, BSNL நிர்வாகம் மீறியுள்ளது என்பதையும் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரியுள்ளது.