BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டம் இன்று (17.02.2021) காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. 16.02.2021 அன்று Dy.CLC(C) நடத்திய சமரச பேச்சு வார்த்தை தொடர்பாக அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த சமரச பேச்சு வார்த்தையில் நிர்வாகத்தின் சார்பில் பங்கேற்ற AGM(SR) அவர்களால், 2021 ஜனவரி மாத ஊதியம் எப்போது தரப்படும் என்று கூட சொல்ல இயலவில்லை.

இந்த சூழ்நிலையில் கூடிய அகில இந்திய மையம், நாளை நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தை சக்தியாக நடத்திட வேண்டும் என முடிவெடுத்துள்ளது. எனவே நாளைய இயக்கத்திற்கான இறுதி கட்ட பணிகளை சிறப்பாக செய்திட வேண்டும் என மாநில, மாவட்ட சங்கங்களை மத்திய சங்கம் கேட்டுக்கொள்கிறது.