கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற IDA முடக்க வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், அதன் தீர்ப்பு BSNL ஊழியர் சங்கத்திற்கு சாதகமாகவே வரும் என்பதை அரசு உதவி தலைமை வழக்கறிஞர் புரிந்துக் கொண்டார். எனவே, அவருடைய வழிகாட்டுதல் அடிப்படையில், IDA முடக்கம் ஊழியர்களுக்கு பொருந்தாது என DPE ஒரு விளக்கத்தை வெளியிட்டது. நீதிமன்ற வழக்கின் மூலம் BSNL ஊழியர் சங்கம் கொடுத்த நிர்பந்தத்தின் காரணமாகவே DPE இந்த உத்தரவை வெளியிட்டது என BSNL ஊழியர் சங்கம் கூறியது.

அதற்கு, தொழிற்சங்கம் என்ற பெயரில் கேளிக்கை விடுதி நடத்தும் சில தலைவர்கள், WhatsApp செய்திகள் மூலம் BSNL ஊழியர் சங்கத்தை கேலி செய்திருந்தனர். ஆனால் தற்போது, ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து உறுதியாக போராடும் பாதுகாவலன், BSNL ஊழியர் சங்கம் தான் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.