இந்திய பொதுத்துறை வங்கிகளை, தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு விற்பது, மாபெரும் தவறு என்று பொருளாதார வல்லுநரும், ரிசர்வ்வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

வங்கிகளை தனியார்மயமாக்கும் மோடி அரசின் முடிவை எதிர்த்து, நாடு முழுவதுமுள்ள வங்கிஊழியர்கள் மார்ச் 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பின்னணியில், பி.டி.ஐ. நிறுவனத்திற்கு ரகுராம் ராஜன் பேட்டி அளித்துள்ளார்.

அதில்தான் மேற் கண்டவாறு கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“வங்கிகளை பெரும் தொழில்நிறுவனங்களுக்கு விற்பது மிகப்பெரிய தவறு என்று நான் நினைக்கிறேன். நல்ல நிலையிலுள்ள எந்தவொரு வங்கியையும் வெளிநாட்டு வங்கிகளுக்கு விற்பது அரசியல் ரீதியாகவும்அவ்வளவு எளிதானது அல்ல.2021 – 22 பட்ஜெட்டில் தனியார்மயமாக்கலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்துகுறைந்த அளவிலான விவரங்களேஉள்ளன. இந்திய தனியார் வங்கிகளில் ஒன்றுக்கு, பொதுத்துறை வங்கிகளை கையகப்படுத்தும் திறன் உள்ளது. ஆனால், அந்த வங்கிக்கு அதில் ஆர்வம் இருக்கிறதா, என்று தெரியவில்லை.

ஆகஸ்ட் 2016-ல் அறிவிக்கப் பட்டு செயலில் உள்ள இடைக்கால பணவீக்க இலக்கு மார்ச் 31 உடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கான பணவீக்க இலக்கை விரைவில் அறிவிக்க வேண்டியது உள்ளது. இந்தச்சூழல், நிதிக் கொள்கையின் கட்டமைப்பில் பெரியளவில் மாற்றங்கள் செய்வதற்கு இது சரியான நேரமில்லை. இதனால் கடன் பத்திர சந்தை பாதிப்பு அடையும்.இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.2021-22 நிதியாண்டில் 2 பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் அரசுக்கு உள்ள பங்குகளை விற்பதன் மூலம் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கோடியை திரட்டுவதென அரசு தீர்மானித்துள்ளது. இதேபோல, 2020-21 நிதியாண்டிலும் பங்குகளை விற்கு ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதுதோல்வியில்தான் முடிந்தது. 2019-ஆம் ஆண்டில் ஐடிபிஐ வங்கி பங்குகளை மோடி அரசு விற்றது. ஆனால்,அந்தப் பங்குகளை அரசாங்கத்திற்குசொந்தமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் (எல்ஐசி) கழகம்தான் வாங்கியது. இதிலும் மோடி அரசு நினைத்தது நடக்கவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் 14 பொதுத்துறை வங் கிகளை ஒருங்கிணைத்தது மட்டுமே மோடி அரசால் செய்ய முடிந்த ஒரே விஷயமாகும்.