இலாகா தேர்வுகளை ONLINEல் நடத்த கார்ப்பரேட் அலுவலகத்தின் RECRUITMENT பிரிவு, ஒரு ஆலோசனையை முன்வைத்துள்ளது. இதன் மீதான தங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு, அங்கீகரிக்கப்பட்ட இரண்டு ஊழியர் சங்கங்களின் பொதுச்செயலர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது.

ஒரு NON EXECUTIVE பதவியிலிருந்து மற்றொரு NON EXECUTIVE பதவிகளுக்கான தேர்வுகளை ONLINE மூலம் நடத்தக்கூடாது என்கிற உறுதியான நிலைபாட்டை, BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே எடுத்துள்ளது. அந்த முடிவின் அடிப்படையில் JEயிலிருந்து JTO பதவி உயர்வு தேர்வை ONLINEல் நடத்த BSNL ஊழியர் சங்கம் ஒப்புதல் கொடுத்துள்ளது. ஆனால் கீழ் மட்டத்தில் உள்ள பல ஊழியர்களுக்கு கணிணியுடன் பணி புரிய முறையான வாய்ப்பு ஏதும் இல்லை. எனவே TT, JE உள்ளிட்ட இலாகா தேர்வுகளை ONLINEல் நடத்துவதில் நமது BSNL ஊழியர் சங்கத்திற்கு ஏற்புடையது அல்ல. 16.03.2021அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டத்தில், இந்த விஷயம் மீண்டும் விவாதிக்கப்பட்டு, நமது முடிவை நிர்வாகத்திற்கு, நமது மத்திய சங்கம் அனுப்பும்.