ஒரு சில நாட்களுக்கு முன், சென்னையில், BSNLன் கருவிகளை நாசம் செய்த ஒரு நபர் கையும் களவுமாக பிடிபட்டார். பின்னர் அந்த நபர், ஏர்டெல் நிறுவனத்தின் ஊழியர் என அடையாளம் காணப்பட்டது. காவல் துறையில் புகார் கொடுத்த பின்னரும், இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனை கண்டித்து, சென்னை தொலைபேசியை சார்ந்த BSNLEU, AIGETOA, SNEA, AIBSNLEA, FNTO மற்றும் TEPU சங்கங்கள் ஒன்றாக சேர்ந்து 16.03.2021 அன்று சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக்தி வாய்ந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளனர். இந்த சங்கங்களின் தலைவர்கள், சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் திரு சஞ்சீவி அவர்களை சந்தித்து, நிர்வாகத்தின் சார்பில் சக்தியான தலையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தலைமை பொது மேலாளர் உறுதி அளித்துள்ளார்.

சரியான காரணத்திற்காக, ஒன்றாக திரண்டு போராடிய சென்னை தொலைபேசி மாநில சங்கங்களுக்கு நாகர்கோவில் மாவட்ட சங்கத்தின்  வாழ்த்துக்கள்.