2021, மார் 22ஆம் தேதி BSNL ஊழியர் சங்கம் தனது 20ஆவது அமைப்பு தினத்தை கொண்டாடுகிறது. அந்த சமயத்தில், பொது மக்கள் மத்தியில் ‘BSNLஐ பாதுகாப்போம்’ என்கிற பிரச்சார இயக்கத்தை ஒரு வார காலம் நடத்துவது எனவும், சென்னையில் கூடிய BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது.

மோடி அரசாங்கம், மெல்ல மெல்ல BSNLஐ சீரழிக்க துவங்கியுள்ளது. BSNL, தனது 4G சேவைகள் வழங்காமல் இருப்பதற்கான, தந்திரமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது. அரசாங்கம் 4G அலைக்கற்றையை வழங்கி விட்டு, 4G கருவிகளை வாங்குவதற்கு அனுமதியை மறுக்கின்றது. 4G சேவையை வழங்கவில்லை எனில், விரைவில் BSNL நிறுவனம் விரைவில் மூடப்படும். மேலும் BSNLன் டவர்களையும், ஆப்டிக் ஃபைபர் கேபிள்களையும் விற்பது என சமீபத்தில் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது கட்டம் கட்டமாக BSNLஐ தனியாருக்கு தாரை வார்ப்பதை தவிர வேறு எதுவுமில்லை. அனைத்து பொதுத்துறைகளையும் சீரழிக்கும் பணியினை மோடி அரசாங்கம் துவங்கி உள்ளது.

எனவே, BSNL ஊழியர் சங்கத்தின் 20வது அமைப்பு தினத்தை செங்கொடி ஏந்தி கொண்டாடுவதுடன், ‘BSNLஐ பாதுகாப்போம்” என்கிற ஒரு வார கால பிரச்சார இயக்கத்தை நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட, மாநில சங்கங்களை மத்திய சங்கம் கேட்டுக்கொள்கிறது. இந்த பிரச்சார இயக்கத்தின் போது, நகரங்களின் ஒவ்வொரு பகுதியிலும், தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். இந்த தெருமுனைக் கூட்டங்களின் போது, BSNL ஊழியர் சங்கத்தின் கொடிகளையும், தட்டிகளையும், ஏந்தி நிற்க வேண்டும். மேலும் ஃப்ளெக்ஸ் தட்டிகளில், BSNL உடனடியாக 4G சேவையை வழங்க வேண்டும், BSNLன் டவர்களையும், ஆப்டிக் ஃபைபர் கேபிள்களையும் விற்க கூடாது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது ஆகிய கோரிக்கை வாசகங்கள் இடம் பெற வேண்டும்.

இந்த ஒரு வார கால பிரசார இயக்கத்தின் போது, பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த வேண்டும் என்றும் மத்திய செயற்குழு முடிவெடுத்துள்ளது.