கார்ப்பரேட் அலுவலக உத்தரவின் படி, BUSINESS AREA ஒருங்கிணைக்கப்பட்ட பின், ஊழியர்களின் மருத்துவ பில்கள் அனைத்தும், BUSINESS AREA மட்டங்களிலேயே தீர்வு காணப்படுகிறது. பல சமயங்களில், அலுவலகங்களிலேயே மருத்துவ பில்கள் தேங்கி விடுவதால், சம்பந்தப்பட்ட ஊழியர், BUSINESS AREA தலைமை அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது அடிக்கடி நிகழ்கிறது. மருத்துவ பில்கள் BUSINESS AREA மட்டத்தில் தீர்வு காணப்படுவதால், அதனை தீர்வு காண ஊழியர்கள், பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது. இது ஊழியர்களுக்கு தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்துகிறது. எனவே, மருத்துவ பில்கள் அனைத்தும், SSA மட்டங்களிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.