இடது ஜனநாயக முன்னணியை அதிகாரத்திற்கு கொண்டு வருவதன் மூலம் கேரளா மீண்டும் வரலாறு படைக்கும். 1957-இல் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவந்த கேரளம் மீண்டும் நாட்டை வழிநடத்தும்.மாற்றுக் கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும் இந்தியாவுக்கு முன்மாதிரியாக விளங்கும் எல்டிஎப் அரசு தொடரவேண்டியது தேசத்தின் உறுதித் தன்மையை பாதுகாப்பதற்கு அவசியமாகும். ஒரு கையில் தேசியக் கொடியையும், மறுகையில் அரசமைப்பு சாசனத்தையும் தூக்கிப்பிடித்து நாட்டைப் பாதுகாக்க மக்கள் போராடுகின்றனர். அவர்களுக்கு இடது ஜனநாயக முன் னணி வலுவூட்டுகிறது. ஜனநாயகத்தையும் அரசமைப்பையும் பாதுகாக்கப் போராடும் அனைவருக்கும் கேரள அரசு ஊக்கம் அளிக்கிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்தப்போவது இல்லை என்று இந்த அரசு அறிவித் துள்ளது. ஐந்தாண்டு இடது ஜனநாயக முன்னணி ஆட்சி, முஸ்லிம்களாகவோ, இந்துக்களாகவோ, அல்லது இதர மதங்களாகவோ அல்லாமல் மனிதர்களாக வாழக்கூடிய மாநிலம் கேரளம் என்பதைநிரூபித்தது. அந்த முன்மாதிரிகள் பாதுகாக்கப் பட வேண்டும்.பொருளாதார பாதுகாப்பைத் தகர்த்தும், அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை தகர்ப்பதன் மூலமும் இந்து ராஷ்டிராவைக் கட்டியெழுப்புவதை பாஜக அரசு நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால் வெறுப்பும் பாகுபாடும் அல்ல… மனிதாபிமானமே வளர்த்தெடுக்கப்பட வேண்டியது என்பதை இடது ஜனநாயக முன்னணி அரசுநிரூபித்துக் காட்டியுள்ளது. நாட்டின் எதிர்காலம் இடதுசாரிகளின் கையில்தான் உள்ளது.

                                **************